twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சட்டப்படி குற்றம்' படம்: தேர்தல் அதிகாரியிடம் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. புகார்!

    By Shankar
    |

    சென்னை: எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் சட்டப்படி குற்றம் படத்தை எதிர்த்து, காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளார்.

    இதுகுறித்து செல்வபெருந்தகை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள புகார் மனு:

    இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் வருகிற விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில், ஒருசில அரசியல்களையும், கட்சித் தலைவர்களையும் உயர்த்தியும், சில கட்சிகளையும் சில கட்சித் தலைவர்களையும் தரம் தாழ்த்தியும் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    பொதுமக்கள் மத்தியில் குறிப்பிட்ட சில கட்சிகளையும் கட்சித் தலைவர்களையும் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த படத்தின் கருத்தும், சில காட்சிகளும் தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்து இருக்கின்றன. எனவே, அந்த படத்தைப் பார்த்துவிட்டு அதன் பிறகு ரிலீஸ் செய்ய அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    -இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Congress party MLA K Selvaperunthagai send complaint to Chief Election Commissioner of Tamil Nadu on SA Chandrasekar's forthcoming release Sattappadi Kutram. He urged to review and ensure whether any party or leader insulted in the film, before the release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X