»   »  2ஜி, ராஜிவ் கொலை, பேரறிவாளன் விவகாரம்... வாய்மைக்கு எதிராக போராட களம் இறங்கும் காங்கிரஸ்

2ஜி, ராஜிவ் கொலை, பேரறிவாளன் விவகாரம்... வாய்மைக்கு எதிராக போராட களம் இறங்கும் காங்கிரஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது வாய்மை படம். மரண தண்டனை கூடாது என்பதை எடுத்துச்சொல்லும் படமாக அமைந்திருந்தது வாய்மை.

ஒன்றிரண்டு குறியீடுகள் இருந்தாலே சும்மா விடமாட்டார்கள் நம்ம அரசியல்வாதிகள். வாய்மை படத்திலோ படம் முழுக்க காங்கிரஸுக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் நிறைந்திருந்தன.


Congress party plans to protest against Vaaimai movie

இயக்குநர் பிஜேபி பார்ட்டி போல... படத்தின் தொடக்கத்தில் வரும் பாடலில் மோடியை கொடியேற்ற விட்டிருந்தார். அதே பாடலில் 2ஜி அலைக்கற்றை ஊழலை காண்பித்திருந்தார். படத்தின் முதல் காட்சியே இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் கொல்லப்படுவதுதான். பின்னர் அதே பாணியில் ஒரு காங்கிரஸ் தலைவர் கொல்லப்படுவதாக காட்டியிருந்தார். கொல்லப்படும் தலைவர் நெஞ்சில் இருக்கும் பேட்ஜில் காந்தி, நேரு படங்கள் இருக்கும்.


கொலையாளி எனக் குற்றம் சாட்டப்படும் நபர்களுக்கு ஆதரவாக பேசுபவராக சாந்தனு நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தான் சாட்சி வாங்கியது தவறு. விசாரணையில் குழப்பம் இருந்த்து உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட சிபிஐ அதிகாரி கேரக்டரை அப்படியே பாக்யராஜை வைத்துக் காட்டியிருந்தார்.


இது எல்லாம் காங்கிரஸை கொதிக்க வைத்துள்ளது. காங்கிரஸ்காரர்கள் படத்தை பார்த்து மேலிடத்துக்கு விஷயத்தை எடுத்து சென்றிருக்கிறார்கள். அநேகமாக நாளையோ நாளை மறுநாளோ அவங்க வாய்மைக்கு எதிரா பொங்க வாய்ப்பிருக்கு!

English summary
The Indian National Congress Party is planning to protest against Vaaimai movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X