twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காங்கிரஸ் போராட்டம்… மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜின் கார் அடித்து நொறுக்கப்பட்டது!

    |

    கேரளா : கேரளாவில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய சாலை மறியல் பகுதிக்குள் நுழைந்த பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.

    ஜோசப் படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் ஜோஜு ஜார்ஜ். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    தனுஷ் நடித்து வெளியான ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

    இளையராஜாவிடம் 4 மணி நேரம் பயிற்சி எடுத்த தனுஷ்...எதுக்கு தெரியுமா ? இளையராஜாவிடம் 4 மணி நேரம் பயிற்சி எடுத்த தனுஷ்...எதுக்கு தெரியுமா ?

    கார் கண்ணாடி உடைக்கப்பட்டது

    கார் கண்ணாடி உடைக்கப்பட்டது

    கேரளா மாநிலம் கொச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இந்த சாலையில் நீண்ட நேரமாக காத்திருந்த மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், சாலையை ஏன் மறிக்கிறீர்கள் என்றும் இதனால பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கூறி வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர் அவரது கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

    குடித்திருந்தார்

    குடித்திருந்தார்

    மேலும், ஜார்ஜ் குடிபோதையில் இருந்ததாகவும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் காங்கிரஸ் கட்சியினர் அவர் மீது குற்றம் சாட்டினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சிலர் அவரை தாக்க முற்பட்டனர். அப்போது போலீசார், தடுத்து நிறத்தி ஜார்ஜை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

    அமைதியாக முறையிட்டேன்

    அமைதியாக முறையிட்டேன்

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், எனது எதிர்ப்பு கட்சிக்கு எதிரானது அல்ல, அவர்களின் போராட்ட பாணிக்கு எதிரானது. என் பக்கத்து காரில், கீமோதெரபி தேவைப்படும் ஒரு இளம் நோயாளி இருந்தார்.. ஏராளமான மக்கள் தங்கள் கார்களுக்குள் அமர்ந்து கொண்டு மிகவும் சிரமப்பட்டனர். நான் அவர்களிடம் சென்று சாலை மறியலை கைவிடும்படி அமைதியாக கூறினேன் என்றார்.

    தகாத வார்த்தைகள்

    தகாத வார்த்தைகள்

    மேலும் பேசிய அவர், நான் குடிபோதையில் இருந்ததாக அவர்கள் புகார் கூறினார்கள். நான் குடிக்கவில்லை, கட்சியினர் சிலர், என் அப்பா, அம்மாவை திட்டினார்கள். நான் நடிகனாக இருப்பதால், தவறை சுட்டிக்காட்டக் கூடாதா? தனது காரை சேதப்படுத்தியதற்காகவும், பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காகவும் ஒரு சில காங்கிரஸ் கட்சியினர் மீது புகார் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    English summary
    Congress workers damaging the rear window of Malayalam actor Joju George's car.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X