»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியில் நடிகை பிபாஸா பாசு நடித்த ஜிஸ்ம் என்ற திரைப்படத்தின் டப்பிங்கான தேகம் படம், பிரச்சனையைக்கிளப்பியதைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுவிட்டது.

சோனியா காந்தியின் பெயரையும், பிரியங்காவின் பெயரையும், காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கமல்நாத்தின்பெயரையும் அந்தப் படத்தில் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக காங்கிரசார் கூறுகின்றனர்.

இதையடுத்து இந்தப் படத்தைத் திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுடன் காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் தொலைபேசியில் பேசினார். அவரது வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான திரையரங்குகளில்இந்தப் படம் எடுக்கப்பட்டுவிட்டது.

முன்னதாக இந்தப் படத்தை எதிர்த்து சென்னையில் காங்கிரசார் போராட்டம் நடத்தியும் தியேட்டர்களைத்தாக்கியும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதாவிடம் காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்தொலைபேசியில் புகார் கூறியதோடு, திரையரங்க உரிமையாளர்களிடம் பேசினார். இதையடுத்து சென்னையில் 4தியேட்டர்களில் இந்தப் படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இப்போது இளங்கோவனின் கோரிக்கையை ஏற்று இந்தப் படத்தை தியேட்டர்களில் இருந்தே உரிமையாளர்கள்எடுத்துவிட்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil