»   »  சினிமா ஸ்ட்ரைக்கை முறியடிக்க சதி?

சினிமா ஸ்ட்ரைக்கை முறியடிக்க சதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
தென்னிந்திய திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் | Filmibeat Tamil

அரசுக்கு எதிராக பொதுமக்களும், முதலாளிகளின் அராஜகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவது உலக நியதி.

தாங்கள் வேலை கொடுப்பவர்களுக்கு எதிராக முதலாளிகள் போராட்டத்தை இப்போது தமிழகத்தில் தொடங்கியுள்ளனர். இது ஒரு வித்தியாசமான போராட்டமே.

Conspiracy against Cinema Strike

தென்னிந்தியதிரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டுக் குழு எடுத்த முடிவின்படி இன்று முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள் ரீலீஸ் செய்யப்படவில்லை.

ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்ட படங்களுக்கு குறைவான பார்வையாளர்களே வந்து கொண்டிருந்தனர்.

இதனையே பல திரையரங்குகள் தொடர்ந்து ஓட்டதொடங்கியுள்ளன. சில ஷிப்டிங் தியேட்டர்களில் வெற்றி பெற்ற பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை தூசி தட்டி திரையிடத் தொடங்கியுள்ளனர்.

இன்று புதியபடங்கள் ரிலீஸ் செய்யப்படாததால் குறைந்தபட்சம் 1.50 கோடி புதிய வருவாய் இழப்பு டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் புதிய நிறுவனங்கள் தங்களுக்கு போட்டியாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளதை அறிந்த டிஜிட்டல் நிறுவனங்கள் தயாரிப்பாபாளர்கள் சங்க கெளரவ செயலாளர் ஒருவரை விலை பேசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனவாம்.

தேர்தல் மூலம் வெற்றிப் பெற்று பொறுப்புக்கு வந்த இவர் மூலம் பொருளாளர் பிரபுவையும் சரி கட்டி விடலாம் என டிஜிட்டல் நிறுவனங்கள் முயற்சித்து வருவதாக முகம் காட்ட விரும்பாத தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த சனிக்கிழமை வரை டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகப் பேசி வந்த கௌரவ செயலாளர் ஞாயிற்றுகிழமை கூட்டத்தில் ஆதரவாக பேசியுள்ளார்.

இவரது பேச்சைக் கேட்டு பொருளாளர் பிரபுவும் மென்மையான அணுகுமுறையில் பேசி வருவதைப் பார்த்து தலைவர் விஷால் அதிர்ச்சிக்குள்ளானாராம்.

வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளதயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் சில நிர்வாகிகளின் போக்கு தயாரிப்பாளர்களின் நலனுக்கு எதிராக எப்படி மாறியது என கேள்வி எழுப்ப தயாராகி வருகின்றனராம்.

English summary
It seems that the digital providers are planning some conspiracy against the current cinema strike.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil