»   »  தெறி டீசருக்கு எதிராக பெரும் சதி!- கொதிக்கும் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் தாணு

தெறி டீசருக்கு எதிராக பெரும் சதி!- கொதிக்கும் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் தாணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வரும் தெறி டீசருக்கு எதிராக பெரும் சதி நடந்துள்ளது. அதனை விரைவில் வெளிப்படுத்துவோம் என படத்தின் இயக்குநர் அட்லீ மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளனர்.

விஜய் நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக அமைந்துள்ள தெறி டீசர், பெரும் தாமதத்துக்குப் பிறகு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.


Conspiracy against Theri teaser, says Thaanu and Atlee

வெளியான 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பேர் இந்தக டீசரைப் பார்த்து ரசித்த நிலையில் திடீரென டீசரை தூக்கியது யுட்யூப். காப்பிரைட் பிரச்சினையால் டீசர் நீக்கப்பட்டதாக காரணம் கூறியது.


ஆனால் சிறிது நேரத்தில் டீசர் மீண்டும் பார்வைக்குக் கிடைத்தது.


இது பற்றி இயக்குநர் அட்லியிடம் கேட்டபோது, "வெளியிட்டதிலிருந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் டிரெய்லரை யாரோ சதி செய்து அகற்ரியிருக்கிறார்கள். அது யாரெனக் கண்டுபிடிக்கும் வேலைகள் நடக்கின்றன," என்றார்.


படத்தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது, "யாரோ வேண்டுமென்றே காப்புரிமை கேட்டு இவ்வாறு செய்துள்ளனர். அந்த சதியை உடைத்து ட்ரைலரை மீண்டும் போட்டுவிட்டோம். அப்படிச் செய்தவர்களை சும்மா விட முடியாது," என்றார்.

English summary
Theri director Atlee and producer Thaanu says that some body have 'played' to stop the teaser of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil