த்ரில்லிங்காக வேற லெவல் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ்... குழப்பத்தில் நின்ற போட்டியாளர்கள்

சென்னை : 100 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 துவங்கப்பட்டு, 50 நாட்கள் கடந்து விட்ட நிலையில் அடுத்தடுத்து சுவாரஸ்யங்களை அதிகரிக்க பிக்பாஸ் டீம் தீவிரமாக யோசித்து வருகிறது. போட்டிகளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சண்டைகள், பலரின் உண்மை முக வெளிப்பாடுகள் போன்றவை வெளிவந்து கொண்டிருக்கிறது.

கமலுக்கு கொரோனா உறுதியாகி அவர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, இந்த வாரம் அவிக்ஷன் இருக்குமா, அப்படி இருந்தால் வெளியேற போவது யார் என்ற கேள்வி மற்றொரு புறம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 வைல்ட் கார்டு என்ட்ரி

வைல்ட் கார்டு என்ட்ரி

இந்த பரபரப்புக்களை மிஞ்சும் வகையில் இந்த வாரம் இரண்டு வைல்ட்கார்டு என்ட்ரிகள் நடைபெற்றுள்ளது. 21 வது நாளில் வெளியேறிய அபிஷேக் ராஜா, 47 வது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் வந்துள்ளார். 50வது நாளில் அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரியாக டான்ஸ் மாஸ்டர் அமீர் வந்துள்ளார். வைல்ட் என்ட்ரிக்கு பிறகு அபிஷேக் அமைதியாகி விட்டதாகவும், வந்து இரண்டு நாட்கள் ஆன பிறகே அமீர் பேச துவங்கி உள்ளாதாகவும் ரசிகர்களே கூற துவங்கி விட்டனர்.

மாஸாக வந்த சஞ்சீவ்

மாஸாக வந்த சஞ்சீவ்

அபிஷேக் பெட்டி மூலமும், அமீர் மாஸ்க் போட்டு டான்ஸ் ஆடியும் என்ட்ரி கொடுத்தனர். இந்நிலையில் அடுத்த வைல்ட்கார்டு மாஸான பாடலுடன் 53 வது நாளான நேற்று விஜய்யின் நெருங்கிய நண்பரும், சின்னத்திரை பிரபல நடிகருமான சஞ்சீவ் என்ட்ரி கொடுத்துள்ளார்.

முதல் முறை போட்டியாளர் குரல்

முதல் முறை போட்டியாளர் குரல்

முதல் முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே போட்டியாளர் ஒருவரின் குரல் ஒலித்தது சஞ்சீவிற்கு தான். யாரையும் ரியாக்ட் பண்ணக் கூடாது என டாஸ்க் கொடுத்து விட்டு, மாஸான பாடலுடன் என்டரி கொடுத்தார் சஞ்சீவ். அதுவும் மெயின் டோர் வெகு நேரமாக திறந்திருக்க, மின்னல் போல் வேகமாக நடந்து வந்தார் சஞ்சீவ்.

குழப்பமான போட்டியாளர்கள்

குழப்பமான போட்டியாளர்கள்

ஆனால் டாஸ்க் முடிந்து விட்டதாக ஒலித்த சஞ்சீவின் குரல் மற்றும் அதைத் தொடர்ந்து ஒலித்த பிக்பாஸின், பசர் அடித்ததும் டாஸ்க் முடியும் என்ற அறிவிப்பையும் மீறி சஞ்சீவ் வரும் போது, பிரியங்கா தவிர தவிர மற்றவர்கள் ரியாக்ட் செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பத்துடனேயே அப்படியே நின்றனர். பிறகு சஞ்சீவ் வந்து சொன்ன பிறகே டாஸ்க் முடிந்து விட்டது, ரியாக்ட் செய்யலாம் என உணர்ந்து, தங்களை அறிமுகம் செய்து கொண்டனர் போட்டியாளர்கள்.

இதுவும் முதல் முறை தான்

இதுவும் முதல் முறை தான்

வழக்கமாக போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வரும் போது தான் ஃபிரீஸ் டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை ரியாக்ட் செய்ய கூடாது என சொல்வார்கள். ஆனால் போட்டியாளர்கள், அதுவும் வைல்ட் கார்டு என்ட்ரியாக வருபவருக்காக டாஸ்க் கொடுக்கப்பட்டது இது தான் முதல் முறை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X