பிக்பாஸ் சீசன் 6 ல் அந்த சர்ச்சை நடிகையா?...அப்போ டிஆர்பி தீயாய் எகிறுமே

சென்னை : ஜனவரி மாதம் பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்தது. இதில் ராஜூ ஜெயமோகன் டைட்டில் வென்றார். ஆங்கர் பிரியங்காவுக்கு 2 வது இடம் வழங்கப்பட்டது.அதன் பின்பு பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஓடிடியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இதை முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன் பின்பு அவர் இடையில் விலக நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சீசனில் போட்டியாளர்கள் லிஸ்ட் பல்வேறு கட்ட நிலைகளுக்கு பிறகு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. போன சீசனில் நிறைய மாடல்கள் இருந்ததால் டி.ஆர்பியில் சின்ன சறுக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 ல் இவரா

பிக்பாஸ் சீசன் 6 ல் இவரா

அதை சரிசெய்ய இந்த முறை போட்டியாளர்கள் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் டி.ஆர்.பியை குறி வைத்து சர்ச்சை நடிகை ஸ்ரீநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தள்ளி போகிறதா பிக்பாஸ்

தள்ளி போகிறதா பிக்பாஸ்

பிக்பஸ் சீசன் 6 அக்டோபர் மாதம் துவங்கப்பட உள்ளதாக ஒரு தகவல் சொல்லப்பட்டாலும், நவம்பர் மாதத்திற்கு தள்ளி போவதாக மற்றொரு தகவலும் தீயாய் பரவி வருகிறது.இதற்கு கமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வருவதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதே சமயம் போட்டியாளர்கள் தேர்விற்கு அதிக அவகாசம் எடுக்கவே நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை

சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை

பிக் பாஸ் சீசன் 6ல் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன. திடீர் பேட்டி, சர்ச்சையான பதில், சிம்பு மேல் காதல், பிறகு சிம்பு தனது அண்ணா என சொன்னது என வரிசையாக தொடர்ந்து இணையத்தில் பல சர்ச்சைகளை சந்தித்த ஸ்ரீநிதிக்கு பிக் பாஸ் சீசன் 6ல் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

 லிஸ்ட் நீளமா போகுதே

லிஸ்ட் நீளமா போகுதே

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 6 ல் விஜய் டிவி தொகுப்பாளர்கள் ரக்ஷன், டிடி, முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகையுமான சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக், நாட்டுப்புற பாடகியும் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்திலின் மனைவியுமான ராஜலட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் கலந்து கொள்ள உள்ளதாக ஒரு பட்டியலில் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த லிஸ்ட்டில் புதிதாக ஸ்ரீநிதியும் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X