»   »  விநாயகர் முதல் ரஜினி வரை பலரையும் வம்புக்கு இழுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா

விநாயகர் முதல் ரஜினி வரை பலரையும் வம்புக்கு இழுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இயக்குனர் ராம் கோபால் வர்மா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்முட்டி என்று பல பிரபலங்களை பற்றி ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா பற்றி அடிக்கடி செய்தி வந்து கொண்டிருக்கிறது. அவர் படம் பற்றிய செய்திகளை விட அவர் யாரையாவது விமர்சித்து வம்புக்கு இழுத்து அவர்கள் பதிலுக்கு திட்டியது பற்றி தான் அதிகம் செய்தி வருகிறது.

அவர் யார், யாரை எல்லாம் வம்புக்கு இழுத்துள்ளார் என்று ஒரு சிறிய பட்டியல் போடப்பட்டுள்ளது.

மம்முட்டி

மம்முட்டி

துல்கர் சல்மானுடன் ஒப்பிடுகையில் அவரது தந்தை மம்முட்டி ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் தான் என்று கூறி மல்லுவுட் ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார் ராம் கோபால் வர்மா.

ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூனியர் என்.டி.ஆர்.

டெம்பர் படம் பார்த்த பிறகு என்.டி.ஆர். உயிர்பித்து வந்து ஜூனியர் என்.டி.ஆரிடம் இருந்து பலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ராம் கோபால் வர்மா ட்வீட் போட்டு ஆந்திர மக்களின் கடுங்கோபத்திற்கு ஆளானார்.

ஷங்கர்

ஷங்கர்

ஐ ட்ரெய்லரை பார்த்தபிறகு தமிழகத்தில் ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை விட ஷங்கர் தான் பெரியவர் என்று உணர்கிறேன் என ராம் கோபால் வர்மா தெரிவித்து கோலிவுட் ரசிகர்களிடம் திட்டு வாங்கினார்.

அஜீத்

அஜீத்

ஐ ட்ரெய்லரை பார்த்தேன். இந்த சங்கராந்தி ஷங்கர் ராத்திரியாக இருக்கப் போகிறது என்று நம்புகிறேன். அந்த படத்தோடு சேர்த்து தங்களின் படத்தை ரிலீஸ் செய்பவர்கள் முட்டாள் என அஜீத்தின் என்னை அறிந்தால் பற்றி தெரிவித்தார் வர்மா. இதையடுத்து அஜீத் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

கே. பாலசந்தர்

கே. பாலசந்தர்

இயக்குனர் கே. பாலசந்தர் உயிருடன் இருக்கையில் அவர் இறந்துவிட்டதாக தவறாக ட்வீட் போட்டார் ராம் கோபால் வர்மா. பின்னர் தனது அதிகபிரசங்கித்தனத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அந்த ட்வீட்டை அழித்தார்.

மகேஷ்பாபு

மகேஷ்பாபு

ஜுனியர் என்டிஆரின் டெம்பர் படத்துடன் ஒப்பிடுகையில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன் ஆகிய படங்கள் எல்லாம் ப்ளாப் போன்று தெரிகிறது என்று ட்வீட் செய்தார் ராம் கோபால் வர்மா. இதை பார்த்த மகேஷ் பாபு ரசிகர்கள் அவரை ட்விட்டரிலேயே விளாசினர்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ராம்கோபால் தான் எடுத்த ஒரு படத்திற்கு ஸ்ரீதேவி என்று பெயர் வைத்தார். தன்னை விட வயது அதிகம் உள்ள பெண் மீது சிறுவன் காதல் கொள்வது தான் கதை. தனது மனைவியின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் போனி கபூர் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

விநாயகர்

விநாயகர்

தனது தலை வெட்டப்படுவதையே தடுக்க முடியாதவர் எப்படி அடுத்தவர்களின் தலையை காப்பாற்றுவார் என்பது தான் என் கேள்வி? இருப்பினும் கயவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று தெரித்து சர்ச்சையை கிளப்பினார் வர்மா.

English summary
Director Ram Gopal Varma hasn't spared superstar Rajinikanth, former TN CM Jayalalithaa and even Lord Ganesha.
Please Wait while comments are loading...