அடங்காத TTF வாசனை முட்டி போட வைத்த மாமன் மகள்.. சந்தானம் சொன்னது அப்படியே நடந்துடுச்சே!
சென்னை: சர்ச்சைகளால் பிரபலமான யூடியூபர் டிடிஎஃப் வாசன், தனது மாமன் மகளை மணந்துள்ளார். இந்தச் செய்தி தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்நிலையில் அவர் தாலி கட்டும் புகைப்படமும், காதல் மனைவிக்கு மெட்டி போட்டுவிடும் புகைப்படமும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் செய்வதன் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன், பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்று விபத்துகளை ஏற்படுத்தியதால், இவருடைய ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட சம்பவம் எல்லாம் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது. அவர் சின்னத்திரை நடிகை ஷாலின் ஜோயாவைக் காதலிக்கிறார் என்று பேச்சுக்கள் இருந்த நிலையில், தனது மாமன் மகளை 5 ஆண்டுகளாக காதலித்ததாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் வெளியிட்ட அந்த வீடியோவில், "நாளை எனக்குக் கல்யாணம் ஆகப் போகிறது என்று நினைக்கிறேன். நான் ராஜஸ்தானில் பைக் ஓட்டிக் கொண்டிருந்த போது, எனது மாமன் மகள் போன் செய்து அவசரமாக வரச் சொன்னார். உடனே காரில் புறப்பட்டு வந்தேன். எனது மாமன் மகள் ஸ்வீட்டு, எனது அத்தைக்கு போன் செய்து நாங்கள் ஐந்து வருடங்களாக காதலிப்பதாக தெரிவித்தார். அதற்குப் பிறகு, வீட்டிற்கு போக மாட்டேன் என்று சொல்லி என்னுடன் கிளம்பி வந்துவிட்டார். அதனால், நாளை நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று நினைக்கிறேன்.

திருமணம்: நான் ஸ்வீட்டுவிடம், இன்னும் ஒரு மூன்று மாதம் காத்திருந்தால், என் படம் ரிலீஸ் ஆகிவிடும். அதன்பிறகு கெத்தாக பெண் கேட்கிறேன், அது இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினேன். அத்தையிடம் இது குறித்து பேசி விட்டேன், ஆனால் மாமாவிடம் இன்னும் பேசவில்லை. மாமாவுக்கு இந்த விஷயம் தெரியுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நாங்கள் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டோம் என்பது மட்டும் தெரியும். ஒருவேளை அவர்கள் யோசித்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை. எனக்கு அப்பா இல்லாததால், என் அப்பாவை எப்படிப் பார்த்துக் கொள்ள ஆசைப்பட்டேனோ, அதேபோல் மாமனாரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
சந்தானம் காமெடி: அதன் பின்னர், டிடிஎஃப் வாசன் தனது மாமன் மகளுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின. இந்நிலையில் அவர் தாலி கட்டும் புகைப்படம், 5 ஆண்டு காதலி மனைவி ஆன பின்னர் மெட்டி போட்டுவிடும் புகைப்படம் என ஒவ்வொன்றாக பகிர்ந்து வருகிறார்கள். முன்னர் வெளியிட்ட வீடியோக்களிலும், புகைப்படங்களிலும் சரி, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திலும் சரி, டிடிஎஃப் வாசன் தனது மனைவியின் முகத்தை மறைத்தபடியே வெளியிட்டுள்ளார். இவரது திருமண வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர் அவர் மெட்டி அணிவிக்க, முட்டி போட்டதைப் பார்த்து, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் காமெடியைப் போல, அடங்காத டிடிஎஃப் வாசனையே முட்டி போட வைத்து விட்டாரே எனறும் கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











