For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தாலி தமிழர் கலாச்சாரம் இல்லை… குக் வித் கோமாளி கனி சர்ச்சை பேச்சு !

  |

  சென்னை : குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றியாளரான கனி தாலி குறித்து பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

  பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் இயக்குனர் திருவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  வாழு வாழ விடு... வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்த வாழு வாழ விடு... வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்த

  இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சினிமா வட்டாரத்திற்கு மட்டுமே தெரிந்த கனி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார்.

  குக் வித் கோமாளி சீசன் 2

  குக் வித் கோமாளி சீசன் 2

  சமையல் நிகழ்ச்சி என்றாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் வித்தியாசமாக உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். முதல் சீசனை விட இரண்டாவது சீசன் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  பல போட்டியாளர்கள்

  பல போட்டியாளர்கள்

  இதில் புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். முதலில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்கள். பின்னர் நடந்த வைல்ட் கார்டு ரவுண்டில் ஷகிலாவும், பவித்ரா லட்சுமியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

  குக் வித் கோமாளி வின்னர் கனி

  குக் வித் கோமாளி வின்னர் கனி

  இந்நிலையில் குக் வித் கோமாளி சீசனின் வின்னராக காரக்குழம்பு கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. பின்னர் பேசிய கனி, வீட்டை விட்டு அதிகம் வெளியில் வராத பெண் நான். எனக்கு இந்த டைட்டில் கிடைத்திருப்பது என்னைப் போன்று வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் கிடைத்திருப்பதாக நினைத்து நான் பெருமை கொள்கிறேன் என்றார்.

  காரக்குழம்பு கனி

  காரக்குழம்பு கனி

  இந்த சீசனின் ஃபைனலில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், வீடியோ மூலம் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர். ரகுமான் கனியை காரக்குழம்பு கனி என்று நக்கலடித்தார். குக்வித் கோமாளி ரசிகர்கள் அனைவரும் குக் வித் கோமாளியின் 3-வது சீசன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

  யூடியூப் சேனல்

  யூடியூப் சேனல்

  தன்னுடைய சமையல் திறமையின் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்த கனி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவர் சொந்தமாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அந்த சேனலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்னென்ன டிஸ்களை செய்தாரோ அதை சமைத்துக்காட்டுகிறார். புதிய புதிய சமையல் டிப்ஸ்களையும் அதில் கூறுகிறார். இதோடு மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் கதையினை மிகவும் சுவாரசியமாக குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்ளும் படி அந்த சேனலில் கூறி வருகிறார்.

  இன்ஸ்டா லைவ்

  இன்ஸ்டா லைவ்

  கனி குழந்தைகளுடனும் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் வீடியோவை கனி வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் வந்த கனியிடம் பலரும் பல கேள்விகளை கேட்டனர். அப்போது, தனது குடும்பம் குறித்து பேசிய கனி என்னுடைய பெரிய பாப்பா பெயர் தியா , சின்ன பாப்பா பெயர் தஷ்மை என் கணவர் திரு தற்போது படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்று இருப்பதாகவும் கூறினார்.

  Ashwin படத்தில் நடிக்கும் Avantika Mishra யார்? | Enna Solla Pogirai, Shades of Kadhal
  தாலி தமிழர்களின் கலாச்சாரம் இல்லை

  தாலி தமிழர்களின் கலாச்சாரம் இல்லை

  மேலும் பல கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டே இருந்த கனி, எல்லாரும் என்கிட்ட நீங்க ஏன் தாலி போடுவது இல்லை என்று கேட்டுக்கிட்டே இருக்குறீங்க நிச்சயமாக இதுபற்றி நான் பேசியே ஆகனும். தாலி போடுவது தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத ஒன்று இடையில் அது புகுத்தப்பட்ட விஷயம். நம்ம தமிழ் கலாச்சாரத்தில் தாலி என்பது இல்லை. மனசுக்கு பிடிச்சவங்களை மாலை மாற்றிக் கொண்டு இவன் என் இணை, இவள் என் துணை என்று வாழத்தொடங்குவது தான் தமிழர்களின் மரபு என்றார். இதை தான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

  தாலி போடுவது அவர்களின் விருப்பம்

  தாலி போடுவது அவர்களின் விருப்பம்

  ஆனால், எனக்கு தாலி கட்டித்தான் திருமணம் நடைபெற்றது. அந்த மஞ்சள் தாலியை நான் 3 மாதம் வரை போட்டு இருந்தேன். அதற்கு பின்பு அந்த தாலியை பிரிச்சு புது தாலி போட்டாங்க, அந்த தாலியை என் கணவர் கட்டவில்லை, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கட்டினார்கள் அதனால் எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. தாலி போடுவதோ, தாலி போடாமல் இருப்பதோ அவர்களின் திருமண வாழ்க்கையையோ, அவர்களின் கேரக்டரையோ நிர்ணயிக்க முடியாது என்றார்.

  தாலி புனிதமானது

  கனி, தாலி குறித்து பேசியது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது. ஒரு சிலர் கனி நீங்கள் பேசியது சரி இல்லை என்றும், தாலி என்பது புனிதமான ஒன்று, அது திருமணத்தின் அடையாளம் நீங்கள் பேசியது அந்த புனிதத்தை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது என்று ஒரு சிலர் பேசி வருகின்றனர். இன்னும், பலர் சரியான பதில் என்று கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.

  English summary
  Kani is now one of the contestants in the cooking reality show Cooku with Comali Season 2 aired on Star Vijay TV.Cook with comali winner kani, spoke controversially on the Instagram live.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X