இரண்டு முறை அல்ல.. மூன்று முறை திருமணம் பண்ணிருக்கேன்.. குக் வித் கோமாளி புகழ் புது விளக்கம்!

சென்னை: குக் வித் கோமாளி புகழ் திருமணம் கடந்த செப்டம்பர் 1ம்தேதி விநாயகர் கோயிலில் நடைபெற்றது.

புகழ் திருமணத்தில் நடிகர்கள் சமுத்திரகனி, சசி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஆனால், இதற்கு முன்பே ஒரு வருடத்திற்கு முன்பு நடிகர் புகழுக்கும் அவரது காதலி பென்ஸியாவுக்கும் பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்புத் திருமணம் நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல்கள் போட்டோ ஆதாரத்துடன் வெளியாகின.

காமெடி நடிகர்

காமெடி நடிகர்

நடிகர் சந்தானம் ஹீரோவான பின்னர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு ஏகப்பட்ட பஞ்சம் நிலவியது. நடிகர் யோகி பாபு அந்த இடத்தை அழகாக ஃபில் செய்த நிலையில், உடனடியாகவே அவரும் ஹீரோவாக அப்டேட் ஆகிவிட்டார். இந்நிலையில், யோகி பாபுவுக்கு பிறகு காமெடி நடிகராக குக் வித் கோமாளி புகழ் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வலிமை, சபாபதி, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த அவரும் உடனடியாக ஹீரோவாக மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் டிவி தந்த பிரபலம்

விஜய் டிவி தந்த பிரபலம்


விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்ட பல போட்டியாளர்களும் நடிகைகளாகவும் ஹீரோக்களாகவும் மாறியுள்ளனர். அந்த ஷோவில் இவரும் ஷிவாங்கியும் அடித்த லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த நிகழ்ச்சி ஹிட் அடித்த நிலையில், புகழுக்கும் மிகப்பெரிய ரசிகர் வட்டம் கிடைக்கவே ஏகப்பட்ட பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்தன.

இந்து முறைப்படி திருமணம்

இந்து முறைப்படி திருமணம்

இந்நிலையில், புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்ஸியாவை இந்து முறைப்படி திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டார். அதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் வாழ்த்திய நிலையில், புகழுக்கும் பென்ஸியாவிற்கும் ஒரு வருடத்திற்கு முன்பே திருமணம் ஆனது என்கிற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சாதி மறுப்புத் திருமணம்

சாதி மறுப்புத் திருமணம்

ஒரு வருடத்திற்கு முன்பே நடிகர் புகழுக்கும் அவரது காதலி பென்ஸியாவுக்கும் பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்புத் திருமணம் நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல்கள் போட்டோ ஆதாரத்துடன் வெளியாகின. ஆனால், அந்த திருமணம் குறித்து காமெடி நடிகர் புகழ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்து முறைப்படி தற்போது அவர் திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பின.

மூன்று முறை திருமணம்

மூன்று முறை திருமணம்

இந்நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகர் புகழ் போட்டோவுடன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. "என் தந்தை அன்பிற்கு ஒரு முறை... என் தாய் அன்பிற்கு ஒரு முறை...
என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை... வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டால் மேலும் ஒரு முறை தயார் . இந்தியனாக இருக்கிறேன் எல்லா புகழும் இறைவனுக்கே!" என மனைவியின் குடும்பத்தார் விருப்பத்திற்காக இன்னொரு முறையும் திருமணம் செய்து கொண்ட போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X