மிஸ் யூ மாமா.. வடிவேலு பாலாஜி நினைவு தினம்.. உருக்கமான போஸ்ட் போட்ட குக் வித் கோமாளி புகழ்!

சென்னை: சின்னத்திரை காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு பாலாஜி நினைவு தினத்தை முன்னிட்டு குக் வித் கோமாளி புகழ் பதிவிட்ட உருக்கமான போஸ்ட் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சியில் காமெடி நடிகராக கலக்கியவர் வடிவேலு பாலாஜி.

வைகைப் புயல் வடிவேலு போல கெட்டப்புகளை போட்டுக் கொண்டு அப்படியே அவரைப் போலவே நடித்துக் காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தவர்.

வடிவேலு பாலாஜி நினைவு தினம்

வடிவேலு பாலாஜி நினைவு தினம்

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி வடிவேலு பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது ஒட்டுமொத்த சின்னத்திரை மற்றும் கோலிவுட் பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேலு பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளை விஜய் டிவி பிரபலங்கள் பலர் அனுசரித்து அவரது நினைவலைகளில் மிதந்து வருகின்றனர்.

மிஸ் யூ மாமா

மிஸ் யூ மாமா

"நீ எங்களுடன் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் நீ இல்லை என்று நினைக்க முடியவில்லை. எப்பவுமே எங்களுடன் நீ இருப்பது போலவே இருக்கிறது மாமா. என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய நீ, முக்கிய தருணங்களில் இல்லாமல் போய்விட்டாயே... இதை எழுதும் போதே என் கண்கள் கலங்குகிறது, மிஸ் யூ மாமா" என குக் வித் கோமாளி புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.

நெருங்கிய நண்பர்கள்

நெருங்கிய நண்பர்கள்

மாமா, மச்சான் என்கிற அளவுக்கு புகழ் மற்றும் வடிவேலு பாலாஜியின் நட்பு ரொம்பவே நெருக்கமாக இருந்தது. வடிவேலு பாலாஜி உயிரிழந்த செய்தி கேட்டு ரொம்பவே துடித்துப் போனார் குக் வித் கோமாளி புகழ். சமீபத்தில், நடைபெற்ற அவரது திருமணத்திற்கு பிறகும் வடிவேலு பாலாஜியின் போட்டோ முன்பாக நின்று ஆசி பெற்று இருந்தார்.

மகனாக பிறக்க வேண்டும்

மகனாக பிறக்க வேண்டும்

தனக்கும் தனது மனைவி பென்ஸியாவுக்கும் வடிவேலு பாலாஜியே மகனாக பிறக்க வேண்டும் என்றும் புகழ் பேசிய பேட்டி எல்லாம் ரசிகர்களை வெகுவாக உருக வைத்துள்ளது. இப்படியொரு நல்ல மனிதரை இழந்து விட்டோமே என அவருடன் பணியாற்றிய அத்தனை பிரபலங்களும் அவரது நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X