Don't Miss!
- News
பட்ஜெட் "லீக்".. மாற்றப்பட்ட பிரிண்டிங் இடம்.. ஆஹா இப்படி எல்லாம் கூட நடந்துச்சா? சுவாரசிய சம்பவம்
- Finance
ஹெல்த் இன்சூரன்ஸ்-க்கு சலுகை.. பட்ஜெட் 2023 மாத சம்பளக்காரர்களுக்கான முக்கிய அறிவுப்பு இதுதான்..!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குக் வித் கோமாளி சீசன் 2... போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவுனு தெரியுமா?
சென்னை : விஜய்டிவியில் சீரியல் என்றாலும், ரீயாலிட்டி ஷோக்கள் என்றாலும், காமெடி நிகழ்ச்சிகள் என்றாலும் அது வேறுமாதிரியாக இருக்கும். இதனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு என்றே தனிக்கூட்டம் உண்டு.
Recommended Video
இந்த வகையில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் இதில் இடம் பெறும் நகைச்சுவைக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜகமே தந்திரம் தனுஷ் கெட்டப்பில் ஸ்பெஷல் ஸ்மைலியை வெளியிட்டது ட்விட்டர்!
இப்படி வெற்றி பெற்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற போட்டியாளர்களுக்கு ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்பதை இப்போது பார்க்கலாம்.

கோமாளி சீசன் 2
தர்ஷா குப்தா இவர் ஜீ தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் தொடரிலும் தற்போது விஜய் டிவி யில் செந்தூரப்பூவேவில் நடித்து வருகிறார். சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் குக்வித் கோமாளி சீசன் 2வில் இவரும் ஒரு போட்டியாளர்.இவருக்கு ஒரு எபிசோடுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாயாகும்.

ஹீரோயினாக
பவித்ரா லட்சுமி இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடி நடிகர் சதீஷூடன் இணைந்து ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இவருக்கு ஒரு எபிசோடுக்கான சம்பளம் ரூ 10 ஆயிரம் ரூபாயாகும்.

கலகலப்பான நகைச்சுவை
இந்த நிகழ்ச்சியை மிகவும் சுவாரஸ்யமாக கலகலப்பாக மக்களிடம் கொண்டு சேர்ந்த பெருமைக்குரியவர் புகழ் இவருக்கு 15 ஆயிரம் ரூபாய் ஒரு எபிசோடுக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பாலாவுக்கும் ரூ15 ஆயிரம் ஊதியமாக விஜய் டிவி வழங்கி உள்ளது.

கோமாளியாக
விஜே மணிமேகலை இவர் சன் சியூசிக்கிலிருந்து தற்போது விஜய் டிவில் பலவேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த அனைவரையும் சிரிக்க வைத்துஇருப்பார் இவருக்கு ரூ20 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஷிவாங்கி மற்றும் அஸ்வினுக்கு 20 ஆயிரம் சம்பளமாகும்.

மக்கள் மனதில் இடம்
இதேபோல பாபா மாஸ்டர் மதுரை முத்து இவங்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாயும். குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளர்கள் அனைவரும் அன்போடு அம்மானு அழைக்கும் ஷகிலாக்கு 50 ஆயிரம் ஒரு எபிசோடுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் என்னை பார்க்கும் பார்வை மாற்றியிருப்பதாக கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கனி வெற்றி பெற்றார்.