Don't Miss!
- Sports
"ஹர்திக் பாண்ட்யா புத்திசாலி இல்லை".. 2வது டி20ல் பெற்ற தோல்வி.. பாக். முன்னாள் வீரர் கடும் விளாசல்!
- Technology
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- News
ரூ.300 கோடியா? சாலையோர வியாபாரிக்கு "பறந்த" வரி ஏய்ப்பில் நோட்டீஸ்! அதிர்ந்த உ.பி ஜிஎஸ்டி அதிகாரிகள்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சுயநலமே இல்லாமல் எப்போதும் மற்றவர்களை ஊக்குவிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
எப்போ வேணாலும் அறிவிக்கலாம்.. பாகிஸ்தான் நிலை ரொம்ப மோசம்..!
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
எலிமினேஷன் சுற்றிலிருந்து டைட்டில் வின்னர் ஆனது எப்படி.. ஸ்ருதிகா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.
நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியின் சிறப்பான இறுதிப்போட்டி ஒளிபரப்பானது. ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இதை கண்டு களித்தனர்.
நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா டைட்டிலை வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டது.
டைட்டிலை
தட்டித்
தூக்கிய
குக்..
சிறப்பாக
நடந்து
முடிந்த
குக்
வித்
கோமாளி
சீசன்
3
நிகழ்ச்சி!

விஜய் டிவி
விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்த இடத்தில் உள்ளது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 கடந்த 20 வாரங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தது. தொடர்ந்து பல எபிசோட்களை மிகவும் சுவாரஸ்யமாக அளித்துவந்த இந்த நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.

பிரம்மாண்ட இறுதிப்போட்டி
இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி நேற்றைய தினம் ஒளிபரப்பானது. மிகவும் சுவாரஸ்யமாகவும் நெகிழ்ச்சியாகவும் நடந்து முடிந்துள்ளது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டிலை நடிகை ஸ்ருதிகா கைப்பற்றியுள்ளார். நேற்றைய தினம் 3 ரவுண்டுகள் மற்றும் வித்தியாசமான டாஸ்குகளில் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

ஸ்ருதிகா வெற்றி
இதையடுத்து இதில் இரண்டு சுற்றுகளில் நடிகை ஸ்ருதிகா வெற்றி பெற்றுள்ளார். அவர் 100க்கு 96 பாயிண்ட்களை பெற்று வெற்றியாளராகியுள்ளார். தொடர்ந்து முதல் ரன்னர் அப்பாக தர்ஷனும் இரண்டாவது ரன்னர் அப்பாக அம்மு அபிராமியும் வெற்ற்றி பெற்றனர். இதில் ஸ்ருதிகாவிற்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் தர்ஷனுக்கு 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த வெற்றியாளர்கள்
தொடர்ந்து அம்மு அபிராமிக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுகளும் அளிக்கப்பட்டன. போட்டியில் வெற்றியாளரின் கோமாளியாக இருந்த புகழுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. பாலாவிற்கும் சிறப்பு பரிசாக 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது.

பரிசுத்தொகையை விட்டுக்கொடுத்த புகழ்
தனது ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் புகழ், பாலாவிற்காக கொடுத்தார். தான் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்காததை சுட்டிக் காட்டிய அவர், இந்த பரிசுக்கு பாலாதான் தகுதியானவர் என்றும் குறிப்பிட்டார். மேலும் பெங்களூருவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பாலா இந்த பரிசுத்தொகையை அளிக்க உள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

கான்செப்டில் கலக்கிய ஸ்ருதிகா
நோ வார் என்றும் பசுமையான சுற்றுச்சூழல் என்றும் கான்செப்ட் பேசில் ஸ்ருதிகா தனது இறுதிப்போட்டியின் இறுதிச் சுற்றை எதிர்கொண்டார். இது நடுவர்களை வெகுவாக கவர்ந்தது. இதைப்பார்த்த நடுவர் தாமு வெகுவாக உணர்ச்சிவசப்பட்டார். ஸ்ருதிகா இளையவராக இல்லாமல் இருந்திருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ருதிகா நெகிழ்சசி
இதையடுத்து நெகிழ்ச்சியடைந்த ஸ்ருதிகா அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். இந்த தருணத்தில் அவரது கணவரும் உடனிருந்தார். அப்போது, அவர் ஒரு விஷயத்தை பகிர்ந்துக் கொண்டார். ஸ்ருதிகா போட்டியின் இடையில் எலிமினேஷன் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஸ்ருதிகாவின் வைராக்கியம்
இதனால் மிகவும் அப்செட்டான ஸ்ருதிகா, அதிலிருந்து மீண்டு ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதில் பெஸ்ட்டாகத்தான் இருக்க வேண்டும் என்ற வைரலாக்கியத்துடன் தற்போது ஜெயித்துக் காட்டியுள்ளதாகவும் அவரது கணவர் குறிப்பிட்டார். இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

அருமை தெரியாமல் தோல்வி
தொடர்ந்து பேசிய ஸ்ருதிகா, தனக்கு மிகவும் இளம்வயதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அதன் அருமை தெரியாமல், தான் ஷைன் ஆகாமல் விட்டுவிட்டதாகவும், இந்த தோல்வி தான் எடுத்துகொண்ட எல்லா விஷயத்திலும் தன்னை வைராக்கியத்துடன் வெற்றி பெற செய்துள்ளதாகவும் அவர் மகிழ்சசியுடன் கூறினார்.

சூர்யாவின் ஜோடி
தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியாக ஸ்ருதிகா கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். ஸ்ரீ என்ற படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இந்தப் படம் படுதோல்வியடைந்தது. தொடர்ந்து 4 படங்களில் மட்டுமே நடித்த நிலையில் பீல்ட் அவுட்டானார். தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்டு தற்போது பிசினசில் இவர் ஈடுபட்டுள்ளார்.