வயாகரா சாப்பிட்ட ஃபீல்.. யாஷிகா ஆனந்த் கைகளை தடவிக்கொடுத்த கூல் சுரேஷ்..பப்ளிக்ல இது தேவையா?

சென்னை : நடிகர் கூல் சுரேஷ் சமீபகாலங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறார். ஒவ்வொரு படத்தின்போதும் இவரது விமர்சனங்களை கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் தியேட்டர் வாசலிலேயே பல் விளக்கிக் கொண்டு ஒரு படம் குறித்த விமர்சனங்களை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த், அசோக்செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள பெஸ்டி படத்தின் பிரஸ்மீட்டில் படக்குழுவினருடன் இவர் பங்கேற்றார்.

நடிகர் கூல் சுரேஷ்

நடிகர் கூல் சுரேஷ்

நடிகர் கூல் சுரேஷ் சமீப காலங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறார். கோலிவுட்டில் ரிலீசாகும் ஒவ்வொரு படத்தின்போதும் திரையரங்குகளுக்கே சென்று அங்கிருந்தபடியே அந்தப் படம் குறித்தும், படத்தின் ஹீரோ, ஹீரோயின்கள் குறித்தும் பேசி வருகிறார். சிறப்பான கமெண்ட்களை கொடுக்கவில்லை என்றாலும்கூட இவரது பேச்சுக்கள் வைரலாகி வருகின்றன.

பல் துலக்கிக்கொண்டு விமர்சனம்

பல் துலக்கிக்கொண்டு விமர்சனம்

கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்திற்கு இவர் திரையரங்க வாசலிலேயே பல் துலக்கிக் கொண்டே கமெண்ட் செய்திருந்தார். இந்த சம்பவமும் வைரலானது. நெகட்டிவ், பாசிட்டிவ் என பல கமெண்ட்களை இவர் பெற்று வருகிறார். தொடர்ந்து பல படங்கள் குறித்து விமர்சனங்களை கொடுத்து வருகிறார்.

வயாகரா சாப்பிட்ட உணர்வு

வயாகரா சாப்பிட்ட உணர்வு

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பெஸ்டி படத்தின் பிரஸ் மீட்டில் படக்குழுவினருடன் இவர் பங்கேற்று பேட்டியளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலரை பார்த்ததாகவும் அதுவே வயாகரா சாப்பிட்டதை போன்ற உணர்வை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

யாஷிகா கைகளை தடவிக்கொடுத்த கூல் சுரேஷ்

யாஷிகா கைகளை தடவிக்கொடுத்த கூல் சுரேஷ்

இந்தப் பேட்டியின்போது அவர் யாஷிகா ஆனந்தின் கைகளை பிடித்து அதை தடவிக் கொடுத்தார். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர் இவ்வாறு நடந்துக் கொண்டது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்க்க தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார்.

யாஷிகாவிற்கு வணக்கத்தை போடு

யாஷிகாவிற்கு வணக்கத்தை போடு

படத்தை இயக்குநர் ரங்கா டைரக்ட் செய்துள்ளார். அவர் எப்போதும் கூறுவது போல வெந்து தணிந்தது காடு, யாஷிகா ஆனந்திற்கு வணக்கத்தை போடு என்று அவர் கூறியுள்ளார். இந்தப் படத்திற்கு இளைஞர்கள் கண்டிப்பாக வரவேற்பு கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெஸ்டி, அசோக் செல்வன், ரங்கா உள்ளிட்டவர்களுக்கும் அவர் வணக்கத்தை போட்டுள்ளார்.

Recommended Video

Yuvan Shankar Raja விட்டு கொடுக்கவே இல்ல | Gayathri-Maamanithan Press Meet | *Kollywood
யாஷிகா ரீ-என்ட்ரி

யாஷிகா ரீ-என்ட்ரி

யாஷிகா ஆனந்த் சில படங்களில் நடித்துள்ள நிலையில், தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்தார். இந்நிலையில் பெஸ்டி படம் அவருக்கு ரீ-என்ட்ரியாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் கவர்ச்சி கொஞ்சம் இல்லை அதிகமாகவே தூக்கலாக காணப்படுகிறது. இதையடுத்து கூல் கூரேஷ் கூறியதைப்போல இந்தப் படம் இளம் ரசிகர்களை அதிகமாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X