இது பிக் பாஸ் இல்ல.. மிட் நைட் மசாலா.. வாந்தி எடுத்து எதிர்ப்பை தெரிவித்த கூல் கூரேஷ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. கடந்த முறை விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், ஒன்பதாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி, 20 போட்டியாளர்களையும் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இதில், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். அரோரா சின்க்ளேர், கனி திரு, விஜே பார்வதி, எஃப்.ஜே, அகோரி கலையரசன், பிரவீன் காந்தி. சபரி என 20 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இந்நிலையில், பட பூஜை ஒன்றின் விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு வாந்தி எடுத்த கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றியுள்ளார். 2026 ஆம் ஆண்டு யார் முதல்வராக வந்தாலும், என் சிஎஸ்கே கட்சியில் நானே முதல்வராக வந்தாலும் முதலில் செய்ய வேண்டியது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வேன். ஏன் என்றால், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சமூகத்தில் சீர்கேட்டை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

இது மிட் நைட் மசாலா: இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நானும் போய் வந்ததை நினைத்து இப்போது வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். ஏன்னென்றால், கடந்த இரண்டு சீசன்களாகவே அரைகுறையாக ஆடை அணிபவர்கள், மற்றவர்களை மதிக்காதவர்கள், இரட்டை வார்த்தை பேசுபவர்களை பிக் பாஸ்க்குள் அனுமதிக்கின்றார்கள். இது மிட் நைட் மசாலா.. ராத்திரி 11 மணிக்கு மேல் என்ன நடக்குமோ அதுதான் அங்கு நடக்கின்றது. இதற்கு முன்பு இடம்பெற்ற சீசன்களை குடும்பமாக இருந்து பார்க்கக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், இப்போது மிட் நைட் மசாலா மாதிரி, அரை குறை ஆடையில் இருப்பவர்களை வீட்டிற்குள் அனுப்பி சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. இப்போது திறமையானவர்கள் வெளியே இருக்கின்றார்கள். திறமை அற்றவர்கள் உள்ளே இருக்கிறார்கள். இதனால், தயவு செய்து 2026ம் ஆண்டு யார் முதலமைச்சர் ஆனாலும், அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்தால், இந்த தமிழகம் சீரும் சிறப்புமாக இருக்கும் என்று கூல் சுரேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











