ராஜபரம்பரையா.. இவ்வளவு பணம் எங்கிருந்து வருது.. பாலாவிடம் விசாரணை நடத்த வேண்டும்.. கூல் சுரேஷ்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா, காந்தி கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. கேட்காமலே தேடிச்சென்று உதவி செய்யும் பாலாவிற்கு, பணம் எங்கிருந்து வருகிறது என விசாரணை நடத்த வேண்டும் என கூல் சுரேஷ் கூறியுள்ளார்.
உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு, உதவும் குணம் கொண்டவராக கேபிஒய் பாலா இருக்கிறார். அவரின் ஆசைப்படி இலவச மருத்துவமனை ஒன்றை பாலா கட்டி வருகிறார். ஆறு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தில்,யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் தன்னுடைய ஆசைப்படியே இலவச மருத்துவமனையை கட்டி வரும் பாலாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கூல் சுரேஷ பேட்டி: அந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கூல் சுரேஷ், கே.பி.ஒய் பாலா தம்பி பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அதற்கு என் மனமார்த்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. அவனுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைக்கிறது என்று தெரியவில்லை. பாலாவின் வீட்டுக்குள் ஏதாவது அமுதசுரபி இருக்கிறதா? அதில் தோண்ட தோண்ட பணம் வருகிறதா? ஆம்புலன்ஸ் வாங்கி தருகிறார், மருத்துவமனை கட்டுகிறார், ஸ்கூல் பீஸ் கட்டுகிறார், வண்டி வாங்கி தருகிறார். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியவில்லை.
விசாரணை நடத்த வேண்டும்: பாலா என்ன ராஜ பரம்பரையா... இல்லை ஜமீன்தார் வீட்டு பையனா.. பாலாவிற்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள். அதைப் பற்றிய முதலில் விசாரணை நடத்த வேண்டும் என கூல் சுரேஷ் பேசியுள்ளார். அவரின், இந்த சர்ச்சை பேச்சு இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், கூல் சுரேஷுக்கு எதிராக பலரும் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு, நீ பேசுவதற்கு மட்டும் தான் லாயக்கு, அவரை பற்றி பேச உனக்கு தகுதியே இல்லை என இணைவாசிகள் அவரை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











