என்னுடைய காதலி அதிதி.. விருமன் படத்தை பார்த்து சில்லறையை சிதறவிட்ட கூல் சுரேஷ்.. இது வேறலெவல்!
சென்னை: சினிமா விமர்சகர்கள், யூடியூபர்களை போலவே முதல் நாள் முதல் ஷோவுக்கு மறக்காமல் சென்று விடுகிறார் நடிகர் கூல் சுரேஷ்.
Recommended Video
கார்த்தி, அதிதி ஷங்கரின் விருமன் படத்தை தியேட்டரில் பார்த்த அவர் செய்த ஆட்ராசிட்டியை, அங்கேயே வீடியோவாக எடுத்து தியேட்டர் நிர்வாகமே வெளியிட்டுள்ளது.
மேலும், அதிதி ஷங்கர் என் காதலி என அவர் அடித்த அக்கப்போரை பார்த்த இளைஞர்கள் அவருடன் சண்டைக்கு செல்லாமல் இருந்தால் சரி.

தியேட்டரில் படம் பார்த்த அதிதி
இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரின் முதல் படமான விருமன் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன்டிஎஸ் தியேட்டருக்கு விசிட் செய்து நடிகை அதிதி ஷங்கர் பார்த்துள்ளார். அங்கே கூல் சுரேஷும் படம் பார்த்த நிலையில், அவர் பேசிய வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.

இங்கேயும் வந்த கூல் சுரேஷ்
ரசிகர்கள், விமர்சகர்கள், யூடியூபர்களுக்கு எல்லாம் முன்னாடி முதல் ஆளாக விருமன் படத்தையும் பார்க்க வந்து விட்டார் நம்ம வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு கூல் சுரேஷ். தியேட்டரில் அதிதி ஷங்கரை பார்த்ததும் இவர் செய்த செயலை வீடியோவாகவே எடுத்து தியேட்டர் நிர்வாகமே தற்போது வெளியிட்டுள்ளது.

சில்லறை செதறவிட்டாரு
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள விருமன் படத்தை தியேட்டரில் பார்த்த கூல் சுரேஷ் தனது சில்லறையை உண்மையாகவே சிதற விட்டுட்டேன் என கீழே கிடந்த காசையும் எடுத்துக் காட்டி பேசியுள்ள வீடியோ ரசிகர்களை ஜாலியாக்கி உள்ளது.

என்னுடைய காதலி அதிதி
அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கே அறிமுகமாகி உள்ளார். அதற்குள் அதிதி என்னுடைய காதலி என கூல் சுரேஷ் காதல் வலையை வீசியதை பார்த்ததும் மற்ற ரசிகர்கள் டென்ஷன் ஆகி விட்டனர். மேலே, பாருங்க அதிதி என்று அவரை ஒருவழியாக கன்ட்ரோலுக்கு கொண்டு வந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











