Don't Miss!
- News
மேடையிலேயே எடப்பாடி காலில் விழுந்த ஆர்.பி.உதயகுமார்! உற்று பார்த்த அதிமுக தொண்டர்கள்! தேனியில் பரபர
- Automobiles
எவ்வளவு காசை கொட்டி கொடுத்தாலும் இந்த புதிய ஜாவா பைக்கை வாங்குறது கஷ்டம்!! காரணம் என்ன தெரியுமா?
- Lifestyle
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Finance
தீபிந்தர் கோயல் கொடுத்த செம அப்டேட்.. 800 பேருக்கு நல்ல சான்ஸ்.. நீங்க ரெடியா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
துணிவும் இல்லை.. வாரிசும் இல்லை.. பொங்கல் கலெக்ஷன் இதுதானாம்.. கூல் சுரேஷ் பளிச்!
சென்னை: இந்த பொங்கலுக்கு துணிவு திரைப்படம் அதிகம் கலெக்ஷன் அள்ளுமா? அல்லது வாரிசு படம் அதிகம் கலெக்ஷன் அள்ளுமா என்கிற கேள்விக்கு நடிகர் கூல் சுரேஷ் அளித்த பதில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற பஞ்ச் வசனம் ஹாஷ்டேக்காக டிரெண்டாகி வருகிறது. #5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் ஹாஷ்டேக்கில் பாஜகவினர் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
டாஸ்மாக் வசூல் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசிய வீடியோவை நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
ரசிகர்களின்
கொண்டாட்டத்தில்
வாரிசு,
துணிவு...
விஜய்யும்
அஜித்தும்
சேர்ந்து
கொடுத்த
சர்ப்ரைஸ்...

தமிழ்நாட்டில் முந்திய துணிவு
நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கே ரிலீஸ் ஆன நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அதன் வசூல் வாரிசு படத்தின் வசூலை விட சற்றே அதிகமாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. ரியல் பாக்ஸ் ஆபிஸை தயாரிப்பு தரப்பு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு திரைப்படம் ஒட்டுமொத்தமாக 23 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணிவை வீழ்த்திய வாரிசு
வாரிசு படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் படங்கள் வெளியாகாத நிலையிலேயே இந்தியளவில் வாரிசு திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூல் வேட்டையை முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவில் மட்டும் முதல் நாளே 4.5 கோடி ரூபாய் வசூல் சாதனையை வாரிசு பெற்றுத்துள்ளது.

நெகட்டிவ் விமர்சனங்கள்
கடந்த ஆண்டு விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை படத்துக்கு கிடைத்ததை போலவே இந்த ஆண்டும் வாரிசு மற்றும் துணிவு என இரு படங்களுக்குமே நெகட்டிவ் விமர்சனங்கள் இரண்டாம் நாள் வெளியாக ஆரம்பித்துள்ளன. முதல் நாளில் படத்தை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், இரண்டு படங்களையும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மாறி மாறி கலாய்த்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட விமர்சகர்கள் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்றே கூறி விட்டனர்.

பொங்கல் வின்னர் யார்
இந்நிலையில், தியேட்டர்களில் FDFS கொண்டாட்டங்களில் களைகட்டி வரும் காமெடி நடிகர் கூல் சுரேஷ் பேசிய பேச்சு டிரெண்டாகி வருகிறது. இந்த பொங்கலுக்கு துணிவு படமா? வாரிசு படமா? எது அதிக கலெக்ஷன் அள்ளும் பொங்கல் வின்னர் யார் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொன்னால், விஜய் அல்லது அஜித் ரசிகர்களிடம் அடி கன்ஃபார்ம் என்பதால் தனது பேச்சையே மாற்றி விட்டார்.

டாஸ்மாக் தான் வின்னர்
இந்த பொங்கலுக்கு வாரிசு படமும் இல்லை துணிவு படமும் இல்லை டாஸ்மாக் தான் வின்னர் என அரசை விமர்சிக்கும் வகையில் கூல் சுரேஷ் பேசிய பேச்சை பாஜவை சேர்ந்த சிடிஆர் ரவி ஷேர் செய்து #5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் என்கிற ஹாஷ்டேக்கை போட்டு திமுகவினரை ட்ரோல் செய்து வருகிறார்.