கூலி ரிசல்ட்.. கலாநிதி மாறன் கார் கொடுக்கமாட்டாருனு தெரிந்துவிட்டதா?.. சௌபின் சாஹிர் செய்த சூப்பர் சம்பவம்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி சுமாரான வெற்றியையே பெற்றது. அதேசமயம் வசூலில் சக்கைப்போடு போட்டிருக்கிறது. முதல் நாளே 151 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் கூலி படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு வைத்திருந்தது. ஏனெனில் இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் அதிக சம்பளம் வாங்குபவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அதேபோல் கடந்த பல வருடங்களாகவே ரஜினிகாந்த் டாப் இடத்தில் இருந்துவருகிறார். இப்படிப்பட்ட இரண்டு பேர் சேர்ந்ததால்தான் இவ்வளவு ஹைப்புகள் படத்தை சுற்றி எழுந்தன.

சுமாரான வரவேற்புதான்: இந்தப் படம் ரஜினியின் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறதுதான். அவரது ஒவ்வொரு அசைவையும் தியேட்டர்களில் சூப்பர் ஸ்டாரின் ஃபேன்ஸ் கொண்டாடி தீர்த்தார்கள். எப்போதுமே அவர் ஸ்டைலையும் இடத்தையும் பிடிப்பது வேறு யாராலும் முடியாதது என்று புகழ்ந்தார்கள். ஆனால் பொதுவான ரசிகர்களுக்கு படம் சுத்தமாக கனெக்ட் ஆகவில்லை என்பதுதான் கள எதார்த்தம்.

என்ன கதை இது?: நண்பரை கொலை செய்தவர்களை ஹீரோ பழிவாங்குவது என்ற காலங்காலமாக இருக்கும் ஒன் லைனைத்தான் லோகி பிடித்திருந்தார். சரி ஒன்லைன் பழசு மேக்கிங்கில் புதிதாக எதையாவது செய்திருப்பார் என்று பார்த்தால்; முன்பே யூகிக்கக்கூடிய காட்சிகள், தட்டையான திரைக்கதை, பல லாஜிக் ஓட்டைகள் என படம் மொத்தமாகவே மூழ்கிவிட்டது. அதேசமயம் வசூலில் எதிர்பார்த்த நம்பரை பெற்றிருக்கிறது படம்.

Coolie actor Soubin Shahir has bought a car worth two crore rupees
Photo Credit:

அதுமட்டுமில்லை: சரி கதை, திரைக்கதைதான் அப்படி என்றால்; பாலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் ஆகிய திரைத்துறையிலிருந்து அமீர் கான், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா ஆகியோரை இறக்கியிருந்தார். அவர்களையும் சரியாக பயன்படுத்தவில்லை என்ற விமர்சனமும் எழுந்தாது. அமீர் கானுக்கு க்ளைமேக்ஸில் வைத்த காட்சி, நாகார்ஜுனாவுக்கு வைக்கப்பட்ட காட்சிகள், லியோ பட சுப்பிரமணி போல் உபேந்திராவை பயன்படுத்தியது, மிகச்சிறந்த நடிகரான சௌபின் சாஹிரை கொடூரமான வில்லனாக காண்பிக்கிறேன் என்கிற பெயரில் சிறந்த நடிப்பை வாங்காமல் விட்டது லோகேஷ் கனகராஜ் கூலி படத்தில் கால் வைத்த இடமெல்லாம் கன்னி வெடிதான்.

சௌபின் சாஹிர் செய்தது: கூலி திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் ஜெயிலர் அளவுக்கு இன்னும் பிக்கப் ஆகவில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில் சௌபின் சாஹிர் BMW XM சொகுசு காரை வாங்கியிருக்கிறார். இந்தக் காரின் விலை 2 கோடி ரூபாய் ஆகும். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு; கூலி ரிசல்ட்டை பார்த்தால் ஜெயிலர் படம் போல் கார் கொடுக்கமாட்டார் என்று சௌபினுக்கு உறுதியாக தெரிந்துவிட்டது. இதன் காரணமாக அவரே புது காரை வாங்கிவிட்டார் என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X