Coolie 11 Day Worldwide Box Office: கூலி 11வது நாள் உலக வசூல்.. விஜய்யின் அந்த பட சாதனை காலி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்றும் 500 கோடி வசூல் எல்லாம் அசால்ட் என்றும் 1000 கோடி வசூல் சாதனை படைக்கும் என ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிடைத்த பெரிய வாய்ப்பை மறுபடியும் கோட்டை விட்ட நிலையில், 500 கோடி வசூலிக்கவே கூலி திரைப்படம் தலைகீழாக தண்ணிக் குடித்துக் கொண்டு வருகிறது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஜெயிலர் படம் போல இந்த படம் வசூல் வேட்டை நடத்தியிருந்தால் சந்தோஷத்தில் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் மற்றும் அனிருத் என ஒவ்வொருவருக்கும் ஒரு கார் பரிசாக அளித்து வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தியிருப்பார் என்கின்றனர்.

ஆனால், கூலி படத்தின் வசூல் இந்த ஆண்டு வெளியான மற்ற படங்களின் வசூலை விட அதிகமாக இருந்தாலும், லியோ மற்றும் ஜெயிலர் படங்களின் வசூலை கூட முறியடிக்காது என்பதே நிதர்சனமான உண்மை என்கின்றனர். 11 நாட்களில் உலகளவில் கூலி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்தும் கோட் படத்தின் லைஃப் டைம் வசூலை முறியடிக்க இன்னும் எவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..
பாக்ஸ் ஆபீஸ் ஸ்கேம்: கூலி திரைப்படம் லியோ மற்றும் ஜெயிலர் வசூலை முந்தாது என்று தெரிந்ததுமே ரஜினிகாந்த் ரசிகர்கள் லியோ பாக்ஸ் ஆபீஸ் ஸ்கேம் என ஹாஷ்டேக் டிரெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டனர். லியோவே ஸ்கேம் என்றால் அப்போ ஜெயிலர் என்ன பாஸ் என பதிலுக்கு விஜய் ரசிகர்களும் கேட்கத் தொடங்கி விட்டனர். தயாரிப்பாளர்கள் பணம் போட்டு படமெடுப்பதால் அவர்களுக்கு ரிட்டர்னாக அதிக லாபம் வருவதையே குறியாக வைத்துள்ளனர். இதுவரை உலகத்திலேயே வராத ஒரு கதையில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார் என்றும் படம் அருமையாக இருக்கு என்பதை எல்லாம் கடந்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொண்டாடும் விதமாக போஸ்டர்களை வெளியிட்டு வரும் நிலையில், அது சில நேரங்களில் பொய்யான தகவல்களையும் உள்ளடக்கி இருப்பதாக சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
கூலி 11 நாள் உலக வசூல்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கூலி திரைப்படம் உலகளவில் முதல் நாளில் 152 கோடி ரூபாயும், 4 நாட்களில் 404 கோடி ரூபாயும் வசூல் செய்ததாக அறிவிப்புகளை போஸ்டர்களாக வெளியிட்டது. ஆனால், அதன் பின்னர், 10வது நாள் போஸ்டரை எல்லாம் விடவே இல்லை. இந்நிலையில், 11 நாட்களில் கூலி திரைப்படம் உலகளவில் 465 கோடி வசூலை அள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த வாரத்திற்குள் 500 கோடியை தொடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கோட் லைஃப் டைம் வசூல் சாதனை முறியடிப்பு: கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்தின் லைஃப் டைம் உலக வசூல் 464.5 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கோட் படத்தின் லைஃப் டைம் பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டு சாதனை கூலி படம் முறியடித்துள்ளது என்கின்றனர். ஜெயிலர் மற்றும் லியோ படங்களின் லைஃப் டைம் வசூலை கூலி முறியடிக்க வாய்ப்பே இல்லை எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











