Coolie Overseas Box Office: கூலி ஓவர்சீஸ் மொத்த வசூல் இத்தனை கோடியா?.. காக்கா கதை போட்டு அலப்பறை!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபார உரிமையை வாங்கிய ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் கூலி படத்தின் ஒட்டுமொத்த ஓவர்சீஸ் வருமானம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒருவழியாக வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோவில் ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேசிய காக்கா கதையை வைத்திருப்பது தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கூலி படத்தின் 4 நாள் உலக வசூலுக்குப் பிறகு எதையுமே அறிவிக்கவில்லை. இந்நிலையில், கூலி படம் 18 நாட்களில் வெளிநாடுகளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

யுஎஸ், யுகேவில் கூலி படத்தை வாங்கி விநியோகம் செய்த ஹம்சினி எண்டர்டெயின்மென்ட்டுக்கு மிகப்பெரிய லாபம் என்று கூறுகின்றனர்.
20 மில்லியன் டாலர் வசூல்: ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், செளபின் சாஹீர், நித்யா ராம், உபேந்திரா, அமீர்கான் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படம் கடந்த 18 நாட்களில் இதுவரை ஓவர்சீஸில் 20 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளதாக ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 176 கோடி ரூபாய் வசூலை கூலி திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் ஈட்டியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
இந்தியாவில் எவ்வளவு வசூல்: சாக்னிக் வெப்சைட் மூலமாக இதுவரை வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவலின்படி கூலி திரைப்படம் இந்தியாவில் 279 கோடி கோடி வசூலை ஈட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. யுகே, யுஎஸ் ஓவர்சீஸ் வசூல் மற்றும் இந்திய வசூலை கூட்டினால் 455 கோடி வசூலை கூலி படம் அள்ளியிருப்பது உறுதியாகிறது. மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் கூலி திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 500 கோடி வசூலை கூலி அள்ளியது என்கிற அறிவிப்பை விரைவில் சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காக்கா கதை: "அந்த காக்கா வந்துட்டு கழுகை போய் கொத்தும், கழுகு ஒண்ணும் பண்ணாது.. இன்னும் கொஞ்சம் மேல பறக்கும்.. காக்காவால அதுக்கு மேல பறக்க முடியாது" என ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய காட்சிகளை சேர்த்து கூலி படத்தின் ஓவர்சீஸ் வசூலை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் வெளியிட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்களை வம்பிழுப்பதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. கூலி படத்தை டிசாஸ்டர் என ரஜினிகாந்த் ஹேட்டர்கள் காலி பண்ண பார்த்த நிலையில், கூலி படமும் பிளாக்பஸ்டர் தான் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக பொய்யான வசூல் கணக்கை எந்த சோஷியல் மீடியா பேஜும் போடக் கூடாது என ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் வார்னிங் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2வுக்கு வெயிட்டிங்: சமீபத்தில் நெல்சன் பேசிய பேச்செல்லாம் கேட்ட ரசிகர்கள் கூலி படத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட்டை ஜெயிலர் 2 படம் தான் கொடுக்கும் என்றும் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் வசூலை விட அதிகமாக வந்து வசூலில் 75 வயதிலும் தான் பாட்ஷா தான் என்பதை ரஜினிகாந்த் நிரூபிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











