Coolie Box Office: இந்த வார இறுதியில் கூலி வசூல் எப்படி இருக்கும்?.. ஜெயிலர் வசூலை தாண்டுமா கூலி?
சென்னை: படத்தின் கதையே தெரியாமல் ரஜினி எனும் ஒரே ஒரு மனிதனுக்காக முதல் 4 நாட்கள் அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் சாதனை நடத்திய கூலி படம் வெளியான பின்னர், கலவையான விமர்சனங்களை சந்தித்ததன் விளைவாக திங்கட்கிழமை முதல் அப்படியே வசூல் சரியத் தொடங்கியது.
இதுவரை கூலி திரைப்படம் 450 கோடி வசூலையே கடக்கவில்லை என்றும் அதனால் தான் சன் பிக்சர்ஸ் அமைதியாக இருப்பதாக கூறுகின்றனர். மேலும், யு/ஏ சான்றிதழை பெற்று இந்த வாரம் மீண்டும் வசூல் வேட்டையை நடத்த சன் பிக்சர்ஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்நிலையில், கூலி படம் 2வது வார இறுதியில் எந்தளவுக்கு வசூலை ஈட்டும் என்பது தொடர்பான வசூல் கணிப்பை இங்கே பார்க்கலாம் வாங்க..
ரசிகர்கள் அப்செட்: கூலி படம் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமாகவோ லோகேஷ் கனகராஜ் படமாகவோ வரவில்லை என்பதால் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டனர். கூலி படத்தின் வசூல் வார நாட்களில் சுத்தமாக படுத்த படுக்கையாக உள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை முதல் இந்த வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை புக்கிங் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக ஆகிவிட்டதா? என பார்த்தால் புக் மை ஷோவில் வெறும் பச்சை நிறமாகவே காட்சியளிக்கிறது.
ஏமாற்றும் வேலை: ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்தை பேச வைத்து விட்டால் போதும் டிக்கெட் புக்கிங் முன்பதிவிலேயே கல்லா கட்டிவிடும், படத்தின் கதை, மேக்கிங் எல்லாம் பெரிதாக இருக்க வேண்டாம் என நினைத்தார்களோ என்னவோ? தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படங்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் படங்கள் எல்லாம் ரசிகர்களை கவராமல் ப்ரீ புக்கிங்கில் பிடுங்கின மட்டும் லாபம் என்கிற கணக்காக படங்களை உருவாக்கி ரசிகர்களை ஏமாற்றி கல்லா கட்டி வருகின்றனர்.
சனி, ஞாயிறும் பச்சை நிறம் தான்: கடந்த வாரம் எல்லாம் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட் புக்கிங்கிற்காக அடித்துக் கொண்டு புக் மை ஷோ, டிஸ்ட்ரிக்ட் ஆப், பிவிஆர் ஆப் என அனைத்தையுமே கிராஷ் செய்த ரசிகர்கள் இப்போ அந்த பக்கம் போகாமல் உள்ள நிலையில், இந்த வார வீக்கெண்ட் புக்கிங் எல்லாமே பச்சை நிறமாகவே பல தியேட்டர்களில் காட்சியளிக்கின்றன. பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் சில காட்சிகள் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கின்றன.
500 கோடி வருமா?: ஜெயிலர், லியோ படங்களை எல்லாம் கூலி பீட் செய்யுமா என்பதை விட தற்போது இருக்கும் சூழலில் 500 கோடி வசூலையாவது இந்த வார இறுதி வசூலுடன் கூலி அள்ளுமா என்கிற கேள்வி தான் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











