Coolie Box Office: நாகார்ஜுனாவால் வந்த அதிர்ஷ்டம்.. தெலுங்கில் மட்டும் கூலி இத்தனை கோடி வசூலா?
சென்னை: தனுஷின் குபேரா திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்ட காரணமே தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அந்த படத்தில் நடித்தது தான் என அப்போதே அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்த நிலையில், மீண்டும் அவரது தயவால் கூலி திரைப்படம் தெலுங்கிலும் நல்ல வசூல் வேட்டையை நடத்தி உள்ளது.
தமிழில் பாகுபலி 2 படமெல்லாம் பெரியளவில் ஓடி வசூல் சாதனையை படைத்தது. கேஜிஎஃப் 2 படமும் இங்கே நைட் ஷோ எல்லாம் ஹவுஸ்ஃபுல் ஆகி எக்ஸ்ட்ரா ஸ்க்ரீன்களை பிடித்து வசூலை வாரிக் குவித்தது. ஆனால், அதன் பின்னர், இந்த ஆண்டு வெளியான பிற மொழிப் படங்கள் ஏதும் தமிழ்நாட்டில் பெரிதாக வசூல் செய்யவில்லை.

குறிப்பாக புஷ்பா 2, கண்ணப்பா உள்ளிட்ட படங்களே தமிழில் பெரிதாக ஓடவில்லை. அதே போல தமிழ் படங்களும் தெலுங்கு மற்றும் மற்ற மொழிகளில் பெரிதாக ஓடாமல் இருந்து வந்த நிலையில், கூலி திரைப்படம் டோலிவுட் ரசிகர்களை அதிகம் ஆட்கொண்டு இருப்பது மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.
500 கோடியை அள்ள போராடும் கூலி: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹீர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், கேமியோ ரோலில் அமீர்கான் மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்த கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வந்தது. இதுவரை 470 கோடிக்கும் குறைவாகவே உலகளவில் கூலி படத்தின் வசூல் உள்ளதாக கூறுகின்றனர். விநாயகர் சதுர்த்தி விடுமுறை மற்றும் இந்த வார இறுதி வரை கூலி திரைப்படம் ஓடினால் தான் 500 கோடியை அள்ளும் என்கின்றனர்.
தெலுங்கில் கலெக்ஷன் அள்ளுது: கடந்த சனிக்கிழமை 10 கோடி ரூபாய் வசூலையும், ஞாயிற்றுக்கிழமை 11 கோடி ரூபாய் வசூலையும் கூலி படம் இந்தியளவில் ஈட்டியது. ஆனால், திங்கட்கிழமையான நேற்று ஒட்டுமொத்தமாக வெறும் 3 கோடி தான் வசூல் வந்திருக்கிறது. இதில், தெலுங்கு வெர்ஷனில் வெளியான கூலி படம் கடந்த 12 நாட்களாக நல்ல வசூல் வேட்டையை நடத்தியிருப்பதாக கூறுகின்றனர். அதிகபட்சமாக 80 கோடி வரை கூலி படம் தெலுங்கு ரசிகர்கள் மூலமாக லாபத்தை சம்பாதித்து இருக்கிறதாம். தெலுங்கு வெர்ஷனிலேயே 100 கோடி வசூலை கூலி அள்ளுமா என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

நாகார்ஜுனாவுக்கு நன்றி: கூலி படத்தில் சைமன் கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக நாகார்ஜுனா நடித்த நிலையில், அவருக்காக தெலுங்கு ரசிகர்கள் அந்த படத்தை தொடர்ந்து பார்த்து வருவது தான் இப்படியொரு வசூல் வேட்டைக்கு காரணம் என்கின்றனர். குபேரா படமும் தமிழை விட தெலுங்கில் வசூல் குவிக்க காரணமே நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா தான் என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், மீண்டும் நாகார்ஜுனாவால் இன்னொரு படமும் தப்பித்துள்ளது என்றும் அவருக்கு சன் பிக்சர்ஸ் ரொம்பவே நன்றிக்கடன் பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். மேலும், சோஷியல் மீடியா முழுவதும் நாகார்ஜுனாவின் சோனியா சோனியா பாடலை போட்டு ஏகப்பட்ட ரீல்ஸ்கள் டிரெண்டாகி வருகின்றன. லோகேஷ் அந்த பாடலை ரெட்ரோ பாடலாக வைத்திருக்கலாம் என்றும் மிஸ் பண்ணிட்டார் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் மமிதா பைஜு, பிரியா வாரியர், அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட 4 இளம் நடிகைகளுடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோவும் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











