சிம்பு நடிக்கும் "கொரோனா குமார்" படப்பிடிப்பு தேதி.. லேட்டஸ்ட் அப்டேட்!

சென்னை : தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நடிகர் சிம்புவை இப்பொழுது ஒட்டுமொத்த திரையுலகமே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க ஒவ்வொரு படத்திற்கும் கெட்டப்பை மட்டும் மாற்றாமல் உடல் எடையையும் குறைத்து மாஸ் காட்டுகிறார்.

ஈஸ்வரன் படத்தின் மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான சிம்புவாக மாறி இப்பொழுது கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக மேலும் 15 கிலோ எடையை குறைத்து அசால்ட் காட்டியுள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றுக் கொண்டிருக்க அடுத்ததாக இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்க இருக்க அதன் படப்பிடிப்பு தேதி தெரியவந்துள்ளது.

அரசியல் த்ரில்லர்

அரசியல் த்ரில்லர்

வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு பிறகு மிகப்பெரிய கேப் எடுத்துக் கொண்ட நடிகர் சிம்பு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி இருந்தாலும் படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு கொண்டே இருக்க இதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இப்பொழுது உடல் எடையை குறைத்து படங்களில் குறித்த நேரத்தில் நடித்துக் கொடுத்து படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து இருந்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு படுஜோராக வெளியாகி செம கல்லா கட்டியது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்திருக்க கலகலப்பான காமெடி படமாக வெளியான ஈஸ்வரன் சிம்புவுக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது. அடுத்ததாக நீண்ட நாட்களாக வெயிட்டிங்கில் இருந்த மாநாடு படத்தையும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வர சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிம்பு இதுவரை பல கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் அரசியல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது மேலும் இப்படத்தில் வில்லனாக நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார் . ஹீரோ மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஃபேவரைட் காதல் படங்களில்

ஃபேவரைட் காதல் படங்களில்

கௌதம் மேனன் சிம்பு கூட்டணியின் முதல் முறையாக இணைந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இன்றளவும் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் காதல் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. காதல் படங்களை இயக்குவதில் வல்லவரான கௌதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் சிம்புவுடன் இணைந்து அச்சம் என்பது மடமையடா என்ற படத்தை இயக்கி இருந்தார் இந்தப் படமும் காதல் மற்றும் டிராவலிங்கை மையப்படுத்திய உணர்வுப்பூர்வமான ஆக்ஷன் படமாக உருவானது. இந்த முறையும் கௌதம் மேனன் சிம்பு கூட்டணி வெற்றி அடைய விண்ணைத் தாண்டி வருவாயா பாகம்-2 உருவாகிறது என பேச்சுக்கள் அடிபட்டது ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா 2க்கு பதிலாக அதன் சீக்குவலாக கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை கௌதம் மேனன் இயக்கி வெளியிட்டிருந்தார். கார்த்திக் டயல் செய்த எண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் ஆளானது .

மேலும் 15 கிலோ குறைத்த

மேலும் 15 கிலோ குறைத்த

இந்த நிலையில் சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. ஏற்கனவே ஈஸ்வரன் படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள சிம்பு இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்காக மேலும் 15 கிலோ எடையை குறைத்த மாஸ் காட்டியுள்ளார்.

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

இப்படத்திற்கு முதலில் நதிகளில் நீராடும் சூரியன் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டது எனவும் புதிய டைட்டில் வெந்து தணிந்தது காடு எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கிராமத்து கதை களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் ஐசரி எஸ் கணேஷ் தயாரிக்கிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமே வாயைப் பிளந்து சிம்புவா இது என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

செப்டம்பர் 25-ம் தேதி

செப்டம்பர் 25-ம் தேதி

கடந்த 2013ஆம் ஆண்டு விஜய்சேதுபதியின் எதார்த்த நடிப்பில் கோகுல் இயக்கத்தில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மிகப்பெரிய வெற்றி பெற்றது. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகளால் உருவான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நந்திதா ஸ்வேதா மிக அழகாக நடித்திருந்தார் மேலும் பசுபதி, சூரி,மொட்டை ராஜேந்திரன், மதுமிதா, ரோபோ சங்கர், டேனியல், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் காமெடியில் கலக்கி இருந்தனர். ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்பட்ட இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குமாறு ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோளை வைத்து வந்தனர் அந்த வகையில் இயக்குனர் கோகுல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக கொரோனா குமார் என்ற கதையை லாக்டவுனில் எழுதியுள்ளார். விஜய் சேதுபதியிடம் போதுமான கால்ஷீட் இல்லாததால் இப்படத்தில் முதலில் சந்தானம் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் கடைசியாக நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த முறையும் காமெடி கதை களத்தில் உருவாக உள்ள கொரோனா குமார் படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது பற்றிய முக்கிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. சிம்பு இப்பொழுது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். எனவே கொரோனா குமார் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 25-ம் தேதி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X