கொரோனாவின் கோரம்.. தேசிய விருது வென்ற ’கோர்ட்’ பட நடிகர் வீர சதிதார் சிகிச்சை பலனின்றி காலமானார்

மும்பை: தேசிய விருது வென்ற கோர்ட் படத்தில் லீடு ரோலில் நடித்த நடிகர் வீர சதிதார் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 61.

நாடு முழுவதும் 2021ம் ஆண்டிலும் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.

சாமானிய மக்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் வரை கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா 2ம் அலை

கொரோனா 2ம் அலை

2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளில் ஆரம்பித்த கொரோனா பரவல், கடந்த ஆண்டு இறுதியில் படிப்படியாக குறையத் தொடங்கியது. கொரோனாவுக்கு ஏகப்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து விட்டன. இனி கவலை இல்லை என நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் கொரோனா 2ம் அலை மீண்டும் மக்களை புரட்டிப் போட்டு வருகிறது.

பாலிவுட்டில் தாக்கம் அதிகம்

பாலிவுட்டில் தாக்கம் அதிகம்

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்ட்ரா, மும்பையில் அதன் தீவிரம் இன்னமும் அதிகமாகவே உள்ளது. அக்‌ஷய் குமார், ஆலியா பட், ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல் என ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கோர்ட் பட நடிகர் காலமானார்

கோர்ட் பட நடிகர் காலமானார்

கடந்த 2014ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான கோர்ட் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சமூக ஆர்வலரும், எழுத்தாளரும் நடிகருமான வீர சதிதார் கொரோனாவால் சமீபத்தில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், ஐசியூவில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று (செவ்வாய் கிழமை) அதிகாலை 3 மணிக்கு வீர சதிதார் காலமானார்.

தேசிய விருது

தேசிய விருது

கோர்ட் படத்தை இயக்கிய சைதன்யா தம்மனே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், கோர்ட் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றிய நினைவுகள் தான் நெஞ்சம் முழுவதும் தற்போது இருப்பதாகவும் இயக்குநர் தம்மனே கூறியுள்ளார்.

சோகத்தில் திரையுலகம்

சோகத்தில் திரையுலகம்

சிறந்த சமூக ஆர்வலரும் பாடலாசிரியருமான வீர சதிதாரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாலிவுட் நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் வீர சதிதாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X