Just In
- 5 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 10 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
- 10 hrs ago
பிக்பாஸில் களைக்கட்டும் கள்ளக்காதல்.. புருஷன் வெளியே இருக்க இளைஞருடன் லூட்டியடிக்கும் பிரபல நடிகை!
- 11 hrs ago
ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் !
Don't Miss!
- News
டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனா எதிரொலி.. தமிழ்நாடு முழுவதும் 990 தியேட்டர்கள் மூடப்பட்டன.. 19ம் தேதி முதல் ஷூட்டிங் ரத்து!
சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் 990 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.

எல்லையோர மாவட்டம்
இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு வரும் 31 ஆம் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு முதலில் எல்லையோர மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களை மூட உத்தரவிட்டது. இதையடுத்து எல்லையோரத்தில் உள்ள 16 மாவட்டங்களில் 395 தியேட்டர்கள் மூடப்பட்டன.

இரவு காட்சிகள்
இந்நிலையில் தமிழக அரசு, வரும் 31 ஆம் தேதி வரை தியேட்டர்களை மூட நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பல தியேட்டர்களில் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஒரு சில தியேட்டர்களில் இரவு காட்சிகள் நடந்தன. இருந்தாலும் ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

990 தியேட்டர்கள்
இந்நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதுபற்றி தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஶ்ரீதரிடம் கேட்டபோது, 'அரசின் உத்தரவு படியும் மக்களின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டும் தியேட்டர்களை இன்று முதல் மூடியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் 990 தியேட்டர்கள் உள்ளன. அனைத்தும் மூடப்பட்டுவிட்டன' என்றார்.

தாராள பிரபு
இதன் காரணமாக, தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த, துல்கர் சல்மான், ரிதுவர்மா நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஜீவாவின் ஜிப்ஸி, அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே, ஹரீஷ் கல்யான், விவேக், தான் ஹோப் நடித்துள்ள தாராள பிரபு, சிபிராஜ், ஷெரீன் கஞ்ச்வாலா நடித்துள்ள வால்டர் உட்பட படங்களைத் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம்
அதோடு இந்த வாரம் வெளியாவதாக இருந்த, காக்டெயில், காவல்துறை உங்கள் நண்பன், ஞானச் செருக்கு, சூடு உட்பட சில படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 19 ஆம் தேதி முதல், சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட உள்ளன. இதையடுத்து ஏப்ரல் மாதம் முதல் தியேட்டர்கள் மீண்டும் செயல்படும் என்று தெரிகிறது.