Don't Miss!
- Sports
54 பந்துகளில் சுப்மன் கில் சதம்.. நியூசி. பந்துவீச்சை சிதறடித்த இந்தியா.. இமாலய இலக்கு நிர்ணயம்
- News
ஓபிஎஸ் வீட்டுக்குச் சென்ற ஜெ.தீபா.. "புது ரூட்டா இருக்கே".. டக்கென திரும்பிப் பார்த்த ஈபிஎஸ்!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆரம்பமே இப்படியா... லால் சலாம் படத்தில் இருந்து விலகிய பிரபலம்: அதிர்ச்சியில் படக்குழு
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மங்களம் சீனு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
இதனை முடித்துவிட்டு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ரஜினி.
விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து முக்கியமான பிரபலம் ஒருவர் விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சரியா
ஒரு
வருஷம்
ஆச்சு...
கவலைகளை
இப்படித்தான்
மறக்கிறேன்...
ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்!

விரைவில் லால் சலாம் ஷூட்
ஜெயிலர் படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்து லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதில், ஒரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கவுள்ளார். 'லால் சலாம்' என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படம் கிரிக்கெட் பின்னணியில் இருக்கும் என சொல்லப்படுகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். விரைவில் லால் சலாம் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏஆர் ரஹ்மான் மியூசிக் கம்போஸிங் வேலைகளை தொடங்கிவிட்டார்.

கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார்
லால் சலாம் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே போஸ்டருடன் வெளியானது. மேலும், லால் சலாம் படத்தின் பூஜையும் நடைபெற்றது. இதில், ரஜினி, லைகா சுபாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடிப்பதாக சொல்லப்படுகிறது. அவர் மொத்தமே 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே திரையில் வருவார் எனவும், ஆனாலும் ரஜினியின் கேரக்டர் செம்ம மாஸ்ஸாகவும் பவர் ஃபுல்லாகவும் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடியாக விலகிய பிரபலம்
லால் சலாம் ஷூட்டிங்கை விரைவில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட உள்ளதாம். அதன் பின்னரே ரஜினி நடிக்கும் சீன்ஸ் எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக கமிட் ஆன பூர்ணிமா ராமசாமி திடீரென விலகுவதாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாற்ற முடியாத கருத்து வேறுபாடுகள்
அந்த டிவிட்டர் பதிவில், "மாற்ற முடியாத கருத்து வேறுபாடுகள் காரணமாக லால் சலாம் படத்தில் இருந்து ப்ரீ புரொடக்ஷன் கட்டத்தின் போதே விலகிக்கொள்கிறேன். இனி லால் சலாம் படத்தின் அனைத்து போஸ்டர்களில் இருந்தும் தனது பெயரை நீக்க வேண்டும் என இதன்மூலம் தெளிவாக சொல்லிவிடுகிறேன்" என இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தயாரிப்பு நிறுவனம் லைகாவை டிவிட்டரில் டேக் செய்துள்ளார். லால் சலாம் பட பூஜையில் கலந்துகொண்ட பூர்ணிமாவின் பெயர், அங்கிருந்த போஸ்டர்களில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஐஸ்வர்யாவும் பூர்ணிமாவும் நெருங்கிய தோழிகளாக இருந்த போதும், மாற்ற முடியாத கருத்து வேறுபாடுகள் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். லால் சலாம் சூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பூர்ணிமா விலகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.