கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ்...தயாராகும் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள்...லேட்டஸ்ட் அப்டேட் இது தான்

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட இன்னும் சில நாட்களே மீதம் உள்ளதால் அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. போட்டியாளர்கள் தேர்வு முடிந்து, அடுத்தடுத்த நடைமுறைகள் துவங்கப்பட்டு விட்டது. அது தொடர்பாக லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 முடிவடைந்து விட்டதால் ரசிகர்களை மகிழ்விக்க அடுத்த நாளே, பிக்பாஸ் நேரத்தில் புதிய சீரியல்களை களமிறக்கி, சரி செய்தது விஜய் டிவி. அதைத் தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியையும் நேற்று துவக்கி விட்டார்கள். இருந்தாலும் பிக்பாஸ் ரசிகர்களை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காக பிக்பாஸ் சீசன் 5 ஃபினாலே மேடையிலேயே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.

கசியும் அடுத்தடுத்த தகவல்கள்

கசியும் அடுத்தடுத்த தகவல்கள்

தொடர்ந்து அடுத்த நாளே பிக்பாஸ் அல்டிமேட்டிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டன. சோஷியல் மீடியாக்களில் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் பற்றிய தகவல்களும் கசிந்து வருகின்றன. இதனால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் துவங்கும் நாள், நேரம், போட்டியாளர்கள் பற்றிய தேர்வால் ரசிகர்கள் மிகவும் குஷியாகி உள்ளனர்.

இது தான் நடக்க போகுது

இது தான் நடக்க போகுது

இதுவரை வெளியான தகவல்களின்படி ஜனவரி 30ம் தேதி மாலை 6.30 மணி முதல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேர நிகழ்வுகளையும், சப்ஸ்கிரைப் செய்தவர்கள் பார்க்கலாம். சந்தாதாரர்கள் அல்லாதவர்களுக்கு தினமும் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்க உள்ளார். வழக்கம் போல் வார இறுதி நாட்களில் வந்து, அந்த வார நிகழ்வுகள் பற்றி பேசி விட்டு, ஒருவரை வெளியேற்ற உள்ளார்.

இவங்க தான் போட்டியாளர்களா

இவங்க தான் போட்டியாளர்களா

மொத்தம் 75 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சிநேகன், ஓவியா, பரணி, சுஜாவருணி, அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, தாமரைச் செல்வி, நிரூப், அபினய் வட்டி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மொத்த போட்டியாளர்கள் 13 ஆ அல்லது 16 ஆ என்பது தெளிவாக தெரியவில்லை.

Recommended Video

Bigg Boss OTT Tamil Promo Shoot Begins!! | Bigg Boss Ultimate tamil Start date
இதுவும் ஆரம்பிச்சுட்டாங்களா

இதுவும் ஆரம்பிச்சுட்டாங்களா

இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக போட்டியாளர்கள் இடம்பெறும் ப்ரோமோவிற்கான ஷுட்டிங் நிறைவடைந்து விட்டதாம். அதைத் தொடர்ந்து போட்டியாளர்களை தனிமைப்படுத்தும் வேலைகள் துவங்கி விட்டதாம். நேற்று இரவு முதல் போட்டியாளர்கள் அனைவரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்களாம். போட்டி துவங்க இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளதால் அடுத்தடுத்த நடைமுறைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X