twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உறவினரை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கிரகலட்சுமியை விடுவிக்க முடியாது - நீதிமன்றம்

    By Shankar
    |

    Grihalakshmi
    சென்னை: அண்ணன் மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி கிரகலட்சுமி உள்ளிட்ட 5பேர் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

    சென்னை தியாகராயர்நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி சிவகாமி சுந்தரி. இவர்களுக்கு பொன்குமார், நாகராஜ் ஆகிய மகன்களும், கிரகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். (நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி).

    இந்த நிலையில் பொன்குமாரின் மனைவி அபிராமி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் பொன்குமார், மாமியார் சிவகாமிசுந்தரி, நாத்தனார் கிரகலட்சுமி, கணவரின் சகோதரர் நாகராஜ் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கூறியிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுலை 20-ந் தேதி, அபிராமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பொன்குமார், நாகராஜ், சிவகாமிசுந்தரி, கிரகலட்சுமி உட்பட 7 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நாகராஜ், கிரகலட்சுமி உட்பட 5 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி சேதுமாதவன் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.

    English summary
    A Chennai women court has dismissed the petition of Grihalakshmi (Ex wife of Prashanth) and 4 others in a suicide case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X