Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சும்மா பக்கத்துல தான் நின்றேன்...விடுவிக்க கோரிய மீரா மிதுன் நண்பர்..மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்
சென்னை : மீராமிதுன் பேசும்போது சும்மா அருகில் நின்றிருந்தேன். என் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும் என மீரா மிதுனுடன் கைதான நண்பர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
பிரபல மாடலான மீரா மிதுன், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி, என்னங்க சார் உங்க சட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறிய ரோல்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களான ஜோடி நம்பர் ஒன், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
என்னை நடிக்க விட்டால் நான் 300 கோடி சம்பாதிப்பேன்.. விக்ரம் பட வசூலை நாசுக்காக வெளிப்படுத்திய கமல்!
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு மிகவும் பிரபலமடைந்த மீரா மிதுன், அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கினார். விஜய், ரஜினி, சூர்யா, த்ரிஷா, ஜோதிகா என பல டாப் நட்சத்திரங்கள் பற்றி அவதூற பேசி பரபரப்பை கிளப்பினார். பிறகு தற்கொலை மிரட்டலும் விடுத்தார். அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் சோஷியல் மீடியாக்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

தொடர் சர்ச்சை...தொடர் கைது
இதனால் பல முறை கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமினிலும் விடுவிக்கப்பட்டார். பிறகு பட்டியலினத்தவர் பற்றி அவதூறு பேசியதற்காக கைது செய்யப்பட்ட மீரா மிதுன், போலீசார் தன்னை துன்புறுத்துவதாக மற்றொரு வீடியோவை வெளியிட்டார். தன்னை முடிந்தால் கைது செய்யும் படி போலீசுக்கு சவால் விட்டு கூட வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து இவர் செய்த அலம்பல்களால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போலீசாரை இவரை கைது செய்து, சிறையில் அடைந்தனர்.

வன்கொடுமை சட்டத்தில் கைது
பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தில் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்து இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

சும்மா பக்கத்துல தான் நின்றேன்
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மீரா மிதுனின் நண்பர் ஷாம் அபிஷேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பட்டியலினத்தவர்கள் குறித்து தான் தவறாக பேசவில்லை எனவும், நடிகை மீரா மிதுன் பேசும்போது அருகில் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு ரத்து கேட்ட மனு தள்ளுபடி
ஆனால் போலீஸ் தரப்பில் நடிகை மீரா மிதுன் பேசுவதை ஆதரித்ததுடன், அவர் பேசுவதற்கு உறுதுணையாக அவரது நண்பர் ஷாம் அபிஷேக் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, நம் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்றும், எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என கருத்து தெரிவித்தார். பின் மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை ஏற்று, அதற்கு அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.