twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு.. மீ்ண்டும் கைது செய்ய போகிறது போலீஸ்.. ஏன் தெரியுமா?

    |

    சென்னை: தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் நடிகை மீரா மிதுன் அலட்சியப்படுத்தி வருகிறார் என்றும் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்த நிலையில், பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ் சினிமாவில் துணை நடிகையாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த மீரா மிதுன் சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியாக போட்டோக்களை போட்டு வந்தார்.

    சர்ச்சைக்கு குறைவில்லாத மீரா மிதுன் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கேயும் பரபரப்பை கூட்டினார்.

    கன்னட மொழியிலும் வெளியாகுது RRR.. படத்தை தடை செய் என டிரெண்ட் ஆன உடனே வந்த மாஸ் அப்டேட்!கன்னட மொழியிலும் வெளியாகுது RRR.. படத்தை தடை செய் என டிரெண்ட் ஆன உடனே வந்த மாஸ் அப்டேட்!

    நடிகர்களை வம்பிழுத்து

    நடிகர்களை வம்பிழுத்து

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யாவை வம்பிழுத்து வாய்க்கு வந்தபடி பேசி வந்த மீரா மிதுனை எதிர்த்து விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விளாசித் தள்ளினர். தொடர்ந்து ஏகப்பட்ட ஹேட்ரட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் மீரா மிதுன்.

    காப்பி அடிக்கின்றனர்

    காப்பி அடிக்கின்றனர்

    தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக் கொண்டு உலாவிய மீரா மிதுன் நடிகை நயன்தாரா முதல் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் வரை தன்னையே காப்பி அடித்து நடித்து வருகின்றனர் என ஏகப்பட்ட வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார்.

    பட்டியலினத்தவர் பற்றி

    பட்டியலினத்தவர் பற்றி

    ஒரு கட்டத்தில் எல்லை மீறிய மீரா மிதுன், பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    கேரளாவில் ஒளிந்து கொண்டு

    கேரளாவில் ஒளிந்து கொண்டு

    கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர், நடந்த விவகாரம் குறித்து பகிரங்க மன்னிப்பு கோரிய மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

    ஒத்துழைக்கவில்லை

    ஒத்துழைக்கவில்லை

    இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. போலீசார் தரப்பு விசாரணைக்கு மீரா மிதுன் ஒத்துழைப்பு தருவதே இல்லை என தெரிவித்தனர்.

    பிடிவாரண்ட்

    பிடிவாரண்ட்

    இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரை கைது செய்து ஏப்ரல் 4ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எந்தவொரு முன் யோசனையும் இல்லாமல் கருத்து தெரிவித்து விட்டு விசாரணைக்கும் முறையாக ஆஜர் ஆகாமல் அலைக்கழித்த காரணத்திற்காக மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்படவிருக்கிறார்.

    English summary
    Court Issues arrest warrant against Meera Mithun for not obeying court orders in her caste related controversial talks case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X