»   »  லிங்கா பட விவகாரம்: ரஜினி, கே.எஸ்.ரவிகுமார் நேரில் ஆஜராக மதுரை கோர்ட் உத்தரவு

லிங்கா பட விவகாரம்: ரஜினி, கே.எஸ்.ரவிகுமார் நேரில் ஆஜராக மதுரை கோர்ட் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: இழப்பீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ரஜினி உள்ளிட்ட லிங்கா படக்குழுவினர் ஆஜராக, நோட்டீஸ் அனுப்ப மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் லிங்கா. இப்படத்தின் கதை தன்னுடையது என மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் மதுரை ஷைகோர்ட் கிளையில் கடந்த டிசம்பர் மாதம் மனுத் தாக்கல் செய்தார்.

Court issues notice to Rajini

அந்த மனுவில், "முல்லைப் பெரியாறு அணை மற்றும் அணையைக் கட்டிய பென்னிகுயிக் வரலாறை பின்னணியாக கொண்டு ‘முல்லைவனம் 999' என்ற படத்தை இயக்கி வருகிறேன். அந்த கதையை திருடி ‘லிங்கா' படத்தை தயாரித்துள்ளனர். எனவே, ‘லிங்கா' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனது கதையை திருடிய ‘லிங்கா' படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ரவிரத்தினம் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தனி நீதிபதி, ‘மனுதாரரின் முக்கியமான கோரிக்கை பதிப்புரிமை சட்டம் தொடர்பானது என்பதால் மனுதாரரின் கோரிக்கைக்கு இந்த நீதிமன்றம் பரிகாரம் அளிக்க முடியாது. மனுதாரர் சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம்" எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக ரவிரத்தினம் மதுரை மாவட்ட கூடுதல் உரிமையியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "லிங்கா படத்தின் கதை, நான் திரைக்கதை எழுதி தயாரித்து வரும் முல்லைவனம் 999 படத்தின் கதை ஆகும். எனவே, லிங்கா படத்தின் கதையும், முல்லைவனம் 999 கதையும் ஒன்று தான் என்று உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை லிங்கா படக்குழுவினர் அந்த படத்தின் கதையை தங்களுடையது என்று சொல்வதற்கு தடைவிதிக்க வேண்டும். என்னுடைய கதையை திருடியதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சரண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணை முடிவில், லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் ஆஜராக நோட்டீசு அனுப்புமாறு உத்தரவிட்டதுடன் வழக்கை வருகிற மார்ச் மாதம் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
A civil court in Madurai has issued notice to actor Rajini, director K.S.Ravikumar and others on Linga movie story.
Please Wait while comments are loading...