twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவதூறு வழக்கு.. நேரில் ஆஜராக வேண்டும்.. நடிகை கங்கனா ரனாவத்துக்கு நீதிமன்றம் சம்மன்!

    By
    |

    மும்பை: பாடலாசிரியர் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்தி நடிகை கங்கனா ரனாவத். தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.

    இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார்.

    ஜாவித் அக்தர்

    ஜாவித் அக்தர்

    இதை விஜய் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது. நடிகை கங்கனா சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருவதும் அது சர்ச்சைக்கு உள்ளாவதும் வாடிக்கையாக இருக்கிறது. அவர் பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் பற்றி பேட்டிகளில் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

    அக்தர் மிரட்டினார்

    அக்தர் மிரட்டினார்

    நடிகர் ஹிருத்திக் ரோசனுடனான உறவு பிரச்சினையில் அமைதி காக்கும்படி தன்னை பாடலாசிரியர் ஜாவித் அக்தர் மிரட்டியதாக அவர் கூறியிருந்தார். ஆனால் இதை ஜாவித் அக்தர் மறுத்தார். தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார்.

    அவதூறு வழக்கு

    அவதூறு வழக்கு

    இதையடுத்து கங்கனா ரனாவத் மீது மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாவித் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், நடிகை கங்கனா, டி.வி. பேட்டிகளில் தன்னை பற்றி அவதூறாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.

    போலீசாருக்கு உத்தரவு

    போலீசாருக்கு உத்தரவு

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிசம்பர் மாதம் ஜூஹூ போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார், நடிகை கங்கனாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

    நேரில் ஆஜராக

    நேரில் ஆஜராக

    அப்போது, நடிகை கங்கனாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம், நடிகை கங்கனாவுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. பின்னர் வழக்கு விசாரணையை மார்ச் 1 ஆம் தேதி
    தள்ளிவைத்தது.

    English summary
    The metropolitan magistrate court on Monday issued summons to Kangana Ranaut on a criminal complaint filed by Javed Akhtar alleging defamatory statements made by the actor about him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X