ஜாய் கிரிஸில்டா சும்மாவே கிழிப்பாங்க.. இப்போ கோர்ட்டும் சப்போர்ட்.. மாதம்பட்டி ரங்கராஜ் இனி அவ்வளவுதான்

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஜாய் கிரிஸில்டாவுக்கும் ரகசியமாக இரண்டாவது திருமணம் நடந்திருக்கிறது. அதுதொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டதன் மூலம் பொதுவெளிக்கு தெரியவந்தது. மேலும் அவர் தன்னை ஏமாற்றிவிட்டகாவும் புகார் அளித்தார். இதனையடுத்து மாதம்பட்டி ரங்கராஜும் தனது பங்குக்கு நீதிமன்றத்துக்கு சென்றார்.

கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாக பரபரப்பு கொடுக்ககூடிய செய்திகளில் ஒன்று மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம். ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்களை பெற்ற ரங்கராஜ்; அவரை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணத்தை செய்திருக்கிறார். அதுதொடர்பான ஃபோட்டோக்களை ஜாய் வெளியிட்டார். புகைப்படங்கள் வெளியே வந்தாலும் தனது முதல் மனைவியுடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

காண்டான ஜாய்: அவர் முதல் மனைவியுடன் உலா வருவதை பார்த்து காண்டான ஜாய் கிரிஸில்டா; கொதிப்படைந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், 'ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டார். எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் பொறுப்பு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

Court ordered that Joy Crizildaa is not barred from speaking about Madhampatty Rangaraj
Photo Credit:

கரு கலைப்பு: மேலும் ரங்கராஜுடன் வாழ்ந்த சமயத்தில் மூன்று முறைக்கும் மேல் கருக்கலைப்பு செய்துவிட்டதாகவும் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை உண்டு செய்தது. தொடர்ந்து ரங்கராஜ் தன்னிடம் குழைந்து குழைந்து பேசியது, முத்தம் கொடுத்தது என புகைப்படங்கள், வீடியோக்களை வரிசையாக சோஷியல் மீடியாக்களில் இறக்கிக்கொண்டே இருந்தார் ஜாய். இதனால் ரங்கராஜ் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போனார்.

நீதிமன்றம் சென்ற மாதம்பட்டியார்: இனிமேல் இதை இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்று முடிவெடுத்து நீதிமன்றம் சென்றார் ரங்கராஜ். தனது மனுவில், 'தன்னை பற்றி ஜாய் அவதூறாக பேசிவருகிறார். அவர் வெளியிடும் வீடியோக்கள், புகைப்படங்களால் தன்னுடைய நிறுவனத்துக்கு கோடி கணக்கான ரூபாயில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவைகளை எல்லாம் நீக்குவதற்கு உத்தரவிட வேண்டும். என்னை பேசுவதற்கும் கருத்து தெரிவிப்பதற்கும் ஜாய்க்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு: இதற்கிடையே அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஜாய் கிரிஸில்டாவிடம் காவல் துறையினர் விசாரணை செய்தனர். விரைவில் மாதம்பட்டியிடமும் விசாரணை நடக்கவிருக்கிறது. இந்நிலையில் ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி கருத்து தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை இல்லை என்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதனை வரவேற்கும் வகையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், 'தனியாக நின்றாலும் சரியான பக்கம் நிற்க வேண்டும்' என குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்களோ, சும்மாவே மாதம்பட்டி ரங்கராஜை ஜாய் கிழி கிழினு கிழிப்பாங்க. இனி சொல்லவே வேண்டாம் என்று கமெண்ட் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X