சமந்தா பற்றிய தவறான வீடியோக்களை நீக்க கோர்ட் உத்தரவு
சென்னை : சோஷியல் மீடியா பக்கங்களில் தனது டிஸ்பிளே பெயரை மாற்றியதில் இருந்தே சமந்தா பற்றிய செய்திகள் வெளிவராத நாளே இல்லை என்ற நிலை ஆகிய விட்டது. அதிலும் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த பிறகும் பல தகவல்கள் அவரது தவிப்பட்ட வாழ்க்கை பற்றி வந்து கொண்டே இருக்கிறது.
Recommended Video
சமந்தா - நாகசைதன்யா இருவருமே தான் விவாகரத்து பெற உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து பல யூட்யூப் சேனல்கள், விவாகரத்திற்கு சமந்தா தான் காரணம் என குற்றம்சாட்டி, பல விதமாக வதந்திகளை பரப்பினர்.

சமந்தா தொடர்ந்த வழக்கு
இன்னும் சிலர் எல்லை மீறி போய், சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்தது தான் விவாகரத்திற்கு காரணம். அவருக்கு பலருடன் கள்ளத்தொடர்பு இருந்தது என்பது உள்ளிட்ட பல வதந்திகள் பரவின. இவற்றை எதிர்த்து சமந்தா தொடர்ந்த அவதூறு வழக்கில், அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அவதூறு பரப்புகிறார்கள்
முன்னதாக சமந்தா வெளியிட்ட அறிக்கையில், எனது தனிப்பட்ட வாழ்க்கை மீது அக்கறை எடுத்து, எனக்கு ஆதரவாக பேசிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. ஆனால் அக்கறை என்ற பெயரில் எனக்கு எதிரான தவறான தகவல்கள் சிலர் பரப்பி வருகின்றன. எனக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், நான் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றும், நான் சந்தர்ப்பவாதி என்றும், பல முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறுகிறார்கள்.

என்னை உடைக்க முடியாது
விவாகரத்து என்பது மிகப் பெரிய வலியான விஷயம். அதிலிருந்து மீண்டு வர எனக்கு கொஞ்சம் கால அகாசம் தேவை. தனிப்பட்ட முறையிலாக இந்த தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனால் இது போன்ற வதந்திகளை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இவை எதுவும் தன்னை உடைக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

நீதிபதி உத்தரவு
இந்த தவறான தகவல்கள் தொடர்பாக மூன்று யூட்யூப் சேனல்கள் மற்றும் வழக்கறிஞர் சிஎல் வெங்கட் ராவ் ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் சமந்தா. ஐதராபாத்தில் உள்ள குக்கட்பல்லி கோர்ட்டில் பல முறை விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சமந்தா பற்றிய தவறான கருத்துக்களை நீக்கும் படி யூட்யூப் சேனல்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இது போன்ற தவறான கருத்துக்களை பரப்பியதற்காக அவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பல படங்களில் ஒப்பந்தம்
சமந்தா சமீபத்தில் நடித்து முடித்துள்ள டைரக்டர் குணசேகரன் இயக்கிய சாகுந்தலம், விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ள இரண்டு படங்களில் சமந்தா ஒப்பந்தமாகி உள்ளார். இதற்கிடையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படத்திலும் நயன்தாராவிற்கு பதில் சமந்தா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











