Just In
- 55 min ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 1 hr ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 2 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 3 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
- News
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பேரிடி.. சி வோட்டர் கருத்து கணிப்பு!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Finance
முகேஷ் அம்பானியின் சூப்பர் திட்டம்.. குடியரசு தின சிறப்பு தள்ளுபடி ஆஃபர்..!
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் சிக்கல்..இன்று ரிலீஸ் ஆவதாக இருந்த விமலின் 'கன்னி ராசி' படத்துக்கு நீதிமன்றம் திடீர் தடை!
சென்னை: விமல் நடித்துள்ள 'கன்னி ராசி' திரைப்படத்திற்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
விமல், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம், கன்னி ராசி. எஸ்.முத்துக்குமரன் இயக்கி உள்ளார்.
மற்றும் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். கிங் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

லாக்டவுனுக்கு முன்
காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப்படம் கொரோனா லாக்டவுனுக்கு முன்பே வெளியாக இருந்தது. ஆனால் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்று (நவம்பர் 27) வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், இன்றும் படம் ரிலீஸ் ஆகவில்லை.

மீடியா டைம்ஸ்
இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமையை மீடியா டைம்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை, மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார்.

சிட்டி சிவில் நீதிமன்றம்
ஆனால், ஒப்பந்தத்தின் போது உறுதி அளித்ததை போல 2018 ஆம் ஆண்டுக்குள் படத்தை, தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை. இந்நிலையில், 'கன்னி ராசி ' திரைப்படம் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு எதிராக மீடியா டைம்ஸ் சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தடை விதிக்கணும்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான வினியோக உரிமைக்காக, தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வேறு நிறுவனம் மூலமாக படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், தன்னிடம் பெறப்பட்ட தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிடக்கோரி அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இடைக்காலத் தடை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக, டிசம்பர் 7ஆம் தேதிக்குள் பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு அவர் உத்தரவிட்டார். இதனால் இன்று வெளியாவதாக இருந்த கன்னிராசி படம் வெளியாகவில்லை.