இந்தியன் 2வில் யுவராஜ் சிங் அப்பா.. அவரே சொன்ன சூப்பர் அப்டேட்.. என்ன ரோலா இருக்கும்?

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை நடித்து வருவதாக ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2 திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தலையிடல் காரணமாக மீண்டும் ஆரம்பித்துள்ளது.

விக்ரம் படம் அமோக வெற்றி அடைந்த நிலையில், லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது.

சேனாபதி கெட்டப்பில்

சேனாபதி கெட்டப்பில்

90 வயது இந்தியன் தாத்தாவாக இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். சுதந்திர போராட்ட காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீசை வைத்த ஒரு கெட்டப்பிலும், மீசை இல்லாமல் இந்தியன் தாத்தா கெட்டப்பிலும் நடித்து வரும் கமல்ஹாசன் மீசை இல்லாத லுக்குடனே இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

யுவராஜ் சிங் அப்பா

யுவராஜ் சிங் அப்பா

இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் புதிய வேகம் எடுத்துள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ் சிங் படத்தில் இணைந்துள்ள ஹாட் அப்டேட் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. மேக்கப் போட்டு நடிக்கும் புகைப்படத்தையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோக்ராஜ் சிங் வெளியிட்டுள்ளார்.

தர்பார் படத்தில்

தர்பார் படத்தில்

யுவராஜ் சிங் போலவே அவரது அப்பா யோக்ராஜ் சிங்கும் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடிவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஏகப்பட்ட பாலிவுட் படங்களிலும் யோக்ராஜ் சிங் நடித்துள்ளார். தமிழிலும் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் கேங்ஸ்டர்களின் தலைவனாக ஒரு காட்சியில் இவர் நடித்திருப்பார்.

கோலிவுட்டில் கிரிக்கெட்டர்கள்

கோலிவுட்டில் கிரிக்கெட்டர்கள்

சமீபத்தில் ஹர்பஜன் சிங் பிரெண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் இர்பான் பதான் நடித்து இருந்தார். மகேந்திர சிங் தோனி தமிழ் சினிமாவில் புதிய படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இப்படி தொடர்ந்து கோலிவுட் பக்கம் ஏகப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் ஒதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நெடுமுடி வேணு கதாபாத்திரமா

நெடுமுடி வேணு கதாபாத்திரமா

இந்தியன் படத்தில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி கதாபாத்திரத்தில் நடித்த நெடுமுடி வேணு இந்தியன் 2 படத்திலும் நடித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடந்த ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்த நிலையில், அந்த கதாபாத்திரத்தில் யோக்ராஜ் சிங் நடிக்கிறாரா? அல்லது வேறு ஏதாவது ரோலா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

எப்போ முடியும்

எப்போ முடியும்

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் ஏற்கனவே 60 சதவீதம் நிறைந்தவடைந்து நிறுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 40 சதவீத படபிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையுமா? அல்லது அடுத்த ஆண்டு வரை இதன் படப்பிடிப்பு செல்லுமா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X