»   »  என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... சிவகார்த்திகேயனுடன் மல்லுகட்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... சிவகார்த்திகேயனுடன் மல்லுகட்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒத்த வார்த்தை இப்படி என்னை பாடாய் படுத்துதே என்று கடந்த ஆண்டு புலம்பி வந்த லட்சுமி ராமகிருஷ்ணனை விடாது கருப்பாய் மீண்டும் விரட்டுகிறது ' என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்ற பாடல். அந்த வார்த்தைக்கு காபி ரைட்ஸ் கேட்டாலும் கேட்டுவிடுவார் என்று அஞ்சியே அந்த பாடல் வரி, விஜய் டிவியில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூற மேலும் கடுப்பாகிவிட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். தற்போது சிவகார்த்திகேயனுடன் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... ' பாடலுக்காக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ரஜினி முருகன்'. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

இப்படத்தில் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' பாடல் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

'ரஜினி முருகன்' படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் 'என்னம்மா' பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டப் போது "அப்பாடல் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்று விஜய் டிவியில் கலாய்க்கப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது என்று பதிலளித்திருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம்

சிவகார்த்திகேயனின் இந்த பதிலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கோபமடைந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், " 'என்னம்மா பாடல்' கலாய்ப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், உண்மையான வசனத்துக்கு சம்பந்தமில்லை என்றும் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.

அப்படி என்றால் கலாய்ப்பு நிகழ்ச்சி ஒரு சிறந்த நிகழ்ச்சியா? என்று கேட்டுள்ளார்.

எல்லை மீறிய சிவகார்த்திக்கேயன்

சிவகார்த்திகேயனின் கலாய்ப்பு எல்லை மீறி போய்விட்டது. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். வணிகரீதிக்காக உபயோகப்படுத்தி விட்டு அதற்கு காரணம் என என்னைக் கலாய்த்தவர்களுக்கு கிரெடிட் தருவது என்பது எந்த விதத்தில் நியாயம்? என்றும் கேட்டுள்ளார்.

நான் பணம் கேட்பேனா?

மேலும் 'என்னம்மா' பாடலுக்கு நான் தான் காரணம் என்று சொன்னால் நான் பணம் கேட்டு விடுவேனா?. கவலை வேண்டாம் சிவகார்த்திகேயன், இதை விட எனக்கு உருப்படியான நிறைய வேலைகள் இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இந்த பஞ்சாயத்து எப்போ முடியுமோ தெரியலையே?

English summary
Lakshmi ramakrishnan tweets "Spoof crossed the limits and hurt me so badly. You use it for commercial purpose and credit the people who mocked me?!"

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil