»   »  சூர்யா-சமந்தாவின் '24' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்?

சூர்யா-சமந்தாவின் '24' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா-சமந்தாவின் '24' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் '24'. விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது.


Cricket Player Guest Appearance in Surya's 24

ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது.


தணிக்கைக் குழுவினர் இப்படத்திற்கு குடும்பத்துடன் பார்க்கும் வகையில் 'யூ' சான்றிதழை வழங்கியுள்ளனர்.இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.


அவர் யாரென்ற விவரங்களை படக்குழுவினர் வெளியிடாமல் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இதனால் அந்த கிரிக்கெட் வீரர் யார்? என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வருகிறது.


சூர்யா தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு விடுமுறையை கழிக்கச்செல்வதால் '24' படத்தை அவர் அமெரிக்காவில் பார்க்கவிருக்கிறார்.


மே 6 ம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியாகும் இப்படம் உலகம் முழுவதும் 2200 திரையரங்குகளில் வெளியாகிறது.

English summary
Sources Said Famous Indian Cricket Player Guest Appearance in Surya's 24.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil