For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பார்வையற்ற காதலர்களின் நகைச்சுவை கலந்த காதல் கதை ‘குக்கூ’

  |

  சென்னை: எழுத்தாளராக அடையாளம் காணப்பட்ட ராஜு முருகனின் முதல் படம் குக்கூ.. கண் பார்வையற்ற இளம் ஜோடியின் காதல் கதைதான் கதைக்களம். இப்படம் மார்ச்-ல் ரிலீசாகிறது.

  இப்படத்தில் 'அட்டக்கத்தி' தினேஷ், மாளவிகா முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் இசையில் அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். தயாரிப்பு ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் த நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்.

  பார்வையற்ற இருவரைப் பற்றிய படம் என்பதை மட்டும் காட்டி மக்களிடம் பச்சாபத்தைப் பெற விரும்பவில்லை. கண்னுக்குப் புலப்படும் அனைத்தையும் தாண்டிய காதல் எப்படி இருக்கும் என்பதை என் படத்தில் காட்ட இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் ராஜூ முருகன்.

  மேலும், குக்கூ பற்றி அவர் கூறியுள்ளதாவது :-

  காதலர் உலகம்...

  காதலர் உலகம்...

  உண்மைக் கதையோ அல்லது கற்பனையோ எல்லாக் காதல் கதைகளுமே நிறம், அழகு, பணம் ஆகியவற்றைத்தான் அடிப்படையாக வைத்து வருகின்றறன.. ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் உண்மையான காதல். அதைத்தான் எனது படத்தில் படம் பிடித்துக் காட்டியுள்ளேன்.

  நேர்மையே பிரதானம்....

  நேர்மையே பிரதானம்....

  கண் தெரியாத இருவர் காதல் வயப்படும்போது அங்கு இந்தக் காரணிகளுக்கெல்லாம் வேலையேஇல்லை. அவர்களது காதலில்நேர்மை மட்டுமே இருக்கும். அதுதான் குக்கூ படத்தின் கதைக்கரு.

  கற்பனைக்கெட்டாத காதல் கதை...

  கற்பனைக்கெட்டாத காதல் கதை...

  நமது ஐம்புலன்களையும் பயன்படுத்தவே அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால் நான்கு புலன்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று வரும்போது என்ன நடக்கும். நீங்கள் எப்போதும் பார்க்கும்காதல் போல அது இருக்காது. அதைக் கற்பனை செய்து பாருங்கள். அதைத்தான் எனது படத்தில் நான் சித்திரப்படுத்தியுள்ளேன்.

  பொழுதுபோக்கான காதல்கதை...

  பொழுதுபோக்கான காதல்கதை...

  இப்படத்தில் நிறைய காமெடி உள்ளது. இரண்டு பார்வையற்றவர்களைக் காட்டி, உங்களை அழ வைப்பது எங்கள் நோக்கமல்ல. அழகான பொழுதுபோக்கான காதல் கதை தான் குக்கூ.

  லைவ் இஸ் பியூட்டிபுல்...

  லைவ் இஸ் பியூட்டிபுல்...

  ‘லைப் இஸ் பியூட்டிபுல்' என்ற வரிகளோடு வரும் குக்கூவில் நிச்சயமாக பரிதாபத்திற்கோ அல்லது சோகத்திற்கோ இடமிருக்காது என அடித்துச் சொல்கிறார் ராஜூ முருகன்.

  சிறப்புப் பயிற்சி...

  சிறப்புப் பயிற்சி...

  குக்கூ படத்தில் கண் பார்வையற்றவர்களாக நடிப்பதற்காக சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டார்களாம் தினேசும், மாளவிகாவும். இது குறித்து ராஜூ முருகன் கூறுகையில், ‘இப்படத்தில் தினேசும், மாளவிகாவும் சிறப்பாக நடித்துள்ளனர். இரண்டு மாத காலம் பார்வைத்திறன் அற்ற குழந்தைகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை அவர்கள் உடனிருந்து கற்றுக் கொண்டார்கள். எப்போது அவர்கள் நடிப்பு எனக்கு திருப்தி பட்டதோ அதன்பிறகே படப்பிடிப்பைத் தொடங்கினோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  English summary
  Director Raju Murugan describes his forthcoming Tamil directorial debut 'Cuckoo' as an honest and cute love story of two blind people. He is confident that the audience won't sympathise with the lead characters. "All love stories, real or reel, are associated with colour, beauty, money and what not. But love is beyond all this and I've captured that in my film," said Murugan.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more