»   »  பிரபல நடிகையை அசிங்கப்படுத்தி அதை வீடியோ எடுத்த விஷமிகள்

பிரபல நடிகையை அசிங்கப்படுத்தி அதை வீடியோ எடுத்த விஷமிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வரும் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவரை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 பேர் சேர்ந்து காரில் கடத்தி 2 மணிநேரமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதை அவர்கள் தங்களின் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

Culprits take video of Actress's molestation

நடிகையை மிரட்டவே புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமூகத்தில் பிரபலமாக உள்ளதால் தனது பெயர் கெட்டுவிடும் என பயந்து நடிகை தனக்கு நேர்ந்ததை வெளியே சொல்ல மாட்டார் என்று அந்த கும்பல் நினைத்துள்ளது.

ஆனால் அவரோ துணிந்து போலீசில் புகார் அளித்து அந்த 3 பேரையும் அடையாளம் காட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் மலையாள திரையுலகினர் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனர்.

English summary
The culprits who kidnapped and molested a popular actress reportedly took pictures and video of that horrible incident.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil