»   »  ரோடு ரோடா பெண்களை சுத்தவிடும் ஆர்யா... சைக்கிளிங் டாஸ்க் பரிதாபம்!

ரோடு ரோடா பெண்களை சுத்தவிடும் ஆர்யா... சைக்கிளிங் டாஸ்க் பரிதாபம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆர்யா நிகழ்ச்சியைக் கலாய்த்த சதீஷ்!

சென்னை : நடிகர் ஆர்யா திருமணம் எப்போது என்பதுதான் தமிழ் சினிமாவின் மில்லியன் டாலர் கேள்வி. அவரது நண்பர்கள் அவரை கலாய்த்தே இதை பாப்புலராக்கி விட்டனர்.

சமீபத்தில், தொடங்கப்பட்டிருக்கும் கலர்ஸ் டி.வி-யில் ஆர்யா திருமணம் செய்துகொள்ளப் பெண் தேடும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண்ணைத்தான் ஆர்யா, திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம். இந்த நிகழ்ச்சியில் சைக்கிளிங் டாஸ்க் வைத்திருக்கிறார்கள்.

ஆர்யா

ஆர்யா

கலர்ஸ் டி.வி-யில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்துகிறார் ஆர்யா. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்யவுள்ளார். அதற்காக ஆர்யா தற்போது நிகழ்ச்சியின் மூலம் பெண் தேடி வருகிறார்.

பெண் தேடும் ஆர்யா

பெண் தேடும் ஆர்யா

இந்த நிகழ்ச்சியில் பல பெண்கள் விண்ணப்பித்து கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பலவித டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் மதிப்பிடப்பட இருக்கின்றனர். இதற்காக ஆர்யாவை இம்ப்ரெஸ் செய்ய முயற்சித்து வருகின்றனர்.

சைக்ளிங்

சைக்ளிங்

ஆர்யா தீவிர சைக்கிளிங் பிரியர். தினமும் சைக்ளிங் போகும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றுவார். ஆர்யாவுடன் நண்பர்கள் பலரும் இணைந்து சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெயிலில் சுற்றும் பெண்கள்

இந்நிலையில், 'எங்க வீட்டு மாப்பிள்ளை' போட்டியாளர்களையும் ராஜஸ்தானில் சைக்கிளிங் அழைத்துச் சென்றுள்ளார் ஆர்யா. சுட்டெரிக்கும் வெயிலில் இளம் பெண்களும் ஆர்யாவுடன் சைக்கிளிங் சென்றுள்ளனர். நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Arya conducting a shor 'Enga veettu maappillai' in Colors TV. Arya looking for his life partner this program. The show has a cycling task. Young girls cycling with Arya in rajasthan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil