»   »  அஜித்திற்காக கொள்கையை விட்டுக்கொடுத்த இசையமைப்பாளர்!

அஜித்திற்காக கொள்கையை விட்டுக்கொடுத்த இசையமைப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்திற்காக தன் கொள்கையை மாற்றி கொண்ட இமான்.

இசையமைப்பாளர் இமான், ஏசுவை ஜெபிக்காமல் ஒரு வேலையையும் செய்யமாட்டார். அந்தளவுக்கு தீவிரப் பற்று. அதுபோல் தான் இசையமைக்கும் படம் அறம் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர். படத்தில் வெட்டுக் குத்து, ரத்தம் வருகிற மாதிரி காட்சிகள் இருந்தால் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டார். அப்படி கைவிட்டுப் போன படங்கள் எக்கசக்கம்.

அவர் இசையமைத்து வெளிவந்த படங்களின் லிஸ்ட்டை ஒருமுறை தேடிப்பாருங்கள் உங்களுக்கே தெரியும். இப்போது சிவா, அஜித் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இமான்தான் இசையமைக்கிறார் என்பதை தயாரிப்பாளர் தரப்பே உறுதி செய்திருக்கிறார்கள்.

D Imman compromises with Ajith team

சிவா - அஜித் கூட்டணி படங்களில் வெட்டுக்குக்துக்கு கொஞ்சம்கூட குறை வைக்க மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்! அப்புறம் எப்படி? அஜித் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவாம். இரண்டு இசையமைப்பாளர்கள் பெயர் பரிசீலனையில் இருந்து மூன்றாவதாக சிவா டீம் இமானை டிக் அடித்த தகவல் தெரிந்து கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கிறார்.

'தல'படம் என்றால் சும்மாவா?!

English summary
Sources say that D Imman has first time compromising his policy and accepting Ajith - Siva movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil