twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திறமைசாலிகளை தேடிப்பிடித்து வாய்ப்பளிக்கும் இமான்...குவியும் பாராட்டுக்கள்

    |

    சென்னை : இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி.இமான். விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

    பிறகு படிப்படியாக வளர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். இதுவரை 100 க்கும் அதிகமான படங்களுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களும் பாடி உள்ளார்.

    விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்ற டி.இமான், டெரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டில் இதுவரை 7 படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    ப்பா.. அந்த கடல் எப்படி பொங்குது பாருங்க.. பீச் பேபி ஷாமா சிக்கந்தரின் வேறமாறி க்ளிக்ஸ்! ப்பா.. அந்த கடல் எப்படி பொங்குது பாருங்க.. பீச் பேபி ஷாமா சிக்கந்தரின் வேறமாறி க்ளிக்ஸ்!

    திறமைசாலிகளுக்கு வாய்ப்பு

    திறமைசாலிகளுக்கு வாய்ப்பு

    முன்னணி இசையமைப்பாளராக இருந்த போதிலும் திறமைசாலிகளை கண்டுபிடித்து அங்கீகாரம் கொடுப்பதையும், அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதையும் தவறாமல் செய்து வருகிறார் இமான். விஸ்வாசம் படம் ரிலீசான சமயத்தில், திருமூர்த்தி என்ற பார்வை திறனற்ற இளைஞர், இமானுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த 'கண்ணான கண்ணே' பாடலை அழகாக பாடி இருந்தார்.

    திருமூர்த்திக்கு கிடைத்த சான்ஸ்

    திருமூர்த்திக்கு கிடைத்த சான்ஸ்

    திருமூர்த்தியின் பாடலை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலானதால், அவரை பற்றி விசாரித்த இமான், திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அதோடு தனது குழுவில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்தார். அவருக்கு இசை பயிற்சியும் அளித்து வந்தார்.

    தொடரும் இமானின் தேடல்

    தொடரும் இமானின் தேடல்

    சமீபத்தில் திருமூர்த்தியை அழைத்த நேரில் பாராட்டிய நடிகர் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மானிடம் திருமூர்த்தியை அறிமுகம் செய்து வைத்தார். ஏ.ஆர்.ரஹ்மானும் தனது இசைப்பள்ளியில் திருமூர்த்திக்கு வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்தார்.திருமூர்த்தியை தொடர்ந்து ரயிலில் பாடும் பெண் ஒருவரையும் இமான் தேடி வந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் கான்டாக்ட் நம்பர் கிடைக்குமா என இமான் கேட்டிருந்தார்.

    நாட்டுப்புற பாடகிக்கு சான்ஸ்

    நாட்டுப்புற பாடகிக்கு சான்ஸ்

    இந்நிலையில் இன்று இமான் தனது ட்வீட்டில், தேவகோட்டை அபிராமி என்ற நாட்டுப்புற பாடகியை பப்ளிக் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.சமுத்திரக்கனி நடிப்பில் ரா.பரமன் இயக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல் எழுதுகிறார். கேகே ரமேஷ் தயாரிக்கிறார். இமான் இசையமைக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

    எங்களுக்கும் சான்ஸ் கொடுங்க

    எங்களுக்கும் சான்ஸ் கொடுங்க

    திறமையாலிகளை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களின் திறமைகளை வெளியுலகிற்கு அடையாளம் காட்டும் இமானின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே சமயம் பலரும் இமானின் இசையில் பாட தங்களுக்கு ஆசையாக உள்ளது என சொல்லி, தங்களுக்கும் சான்ஸ் தருமாறு கேட்டு வருகின்றனர்.

    English summary
    Few years back D.Imman introduced Thirumoorthy to the world. Then Imman searching for another talent singer who was a train singer. Now he introduced a folk singer Devakottai Abirami via Public movie.He shared this info in his twitter page. Netizens appreciated Imman's action.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X