»   »  இத்தனை வருஷ கேள்விக்கு விடை கிடைச்சிருச்சி!- இமான் ஹேப்பி

இத்தனை வருஷ கேள்விக்கு விடை கிடைச்சிருச்சி!- இமான் ஹேப்பி

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்திற்காக தன் கொள்கையை மாற்றி கொண்ட இமான்.

சென்னை: தல படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆனதன் மூலம் இத்தனை வருட கேள்விக்கு விடைக் கிடைத்துள்ளது என்று இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இத்தனை வருஷ கேள்விக்கு விடை கிடைச்சிருச்சி!- இமான் ஹேப்பி

படத்துக்கு ஆரம்பத்தில் பல்வேறு இசையமைப்பாளர்கள் பெயர்கள் பரிந்துரையில் இருந்தன. ஆனால் இறுதியாக டி இமானைத் தேர்வு செய்தனர்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இதனால் சந்தோஷமடைந்த இமான், "இத்தனை ஆண்டுகளாக என்னை நோக்கி ஒரு கேள்வி இருந்தது... ஏன் தல அஜித் படத்துக்கு மட்டும் இசையமைக்கவில்லை என்ற கேள்வி இது. இப்போது அதற்கான விடை கிடைத்துவிட்டது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்," என்று கூறியுள்ளார்.

இமான் இசையமைப்பாளராக அறிமுகமானதே நடிகர் விஜய் படமான தமிழன் மூலம்தான். அவர் அறிமுகமாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அஜித் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

English summary
D Imman has officially confirmed as Ajith movie composer after his debut of 17 years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil