»   »  அஜித் செம ஹேப்பி.. பாடல்களால் குஷியாக்கிய டி.இமான்!

அஜித் செம ஹேப்பி.. பாடல்களால் குஷியாக்கிய டி.இமான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித் ரசித்த விசுவாசம் பாடல்கள்- வீடியோ

சென்னை : அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கவிருக்கும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

இயக்குநர் சிவா கேட்டுக்கொண்டதால் ஷூட்டிங் தொடங்குவதற்குள் இரண்டு பாடல்களை இசையமைத்து விட்டார் டி.இமான்.

அந்தப் பாடல்களை சிவா அஜித்தையும் கேட்கவைக்க, அவர் பாடல்கள் சிறப்பாக இருந்ததால் குஷியாகி இருக்கிறார் அஜித்.

விசுவாசம்

விசுவாசம்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருந்தது. ஆனால் திரைத்துறையினரின் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு பாடல்கள்

இரண்டு பாடல்கள்

'விசுவாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக இரண்டு பாடல்கள் வேண்டும் என்று இயக்குனர் சிவா, டி.இமானிடம் கேட்டிருந்ததாராம். தற்போது அந்த இரண்டு பாடல்களையும் இமான் கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம்.

கூடுதல் உழைப்பு

கூடுதல் உழைப்பு

இமான் தற்போது இசையமைத்த பாடல்களில் ஒன்று அஜித்தின் இன்ட்ரோ பாடல் மற்றொன்று டூயட் பாடலாம். முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைப்பதால் அவர் கூடுதல் உழைப்புடன் இசையமைத்து வருகிறாராம்.

அஜித் ஹேப்பி

அஜித் ஹேப்பி

'விசுவாசம்' படத்தில் அஜித்திற்கான தீம் மியூசிக்கையும் முடித்துவிட்டாராம் இமான். இமானின் பாடல்களைக் கேட்ட சிவா, அதை அஜித்தையும் கேட்கவைக்க, செம ஹேப்பியாகி விட்டாராம் அஜித்.

English summary
Ajith, Nayanthara starrer 'viswasam' will start shooting soon. Music director D.Imman had composed two songs before shooting. Ajith listened these songs and felt happy about it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X