பிக்பாஸ் சீசன் 6 ல் இமானின் முன்னாள் மனைவியா...ரைட்டு...அடுத்த சம்பவம் ரெடியாயிடுச்சு

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 ல் இசையமைப்பாளர் டி.இமானின் முன்னாள் மனைவி போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் போன சீசனில் மிஸ் ஆன பரபரப்பையும் சேர்த்து இந்த சீசனில் கொண்டு வர விஜய் டிவி ரெடியாகி வருவதாக பேச்சு அடிபடுகிறது.

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் டாப் இடத்தில் உள்ளது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. இந்த 5 சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து ஓடிடி வெர்சனாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் 24 மணிநேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது.

பிக்பாஸ் 6 எப்போ துவங்குது

பிக்பாஸ் 6 எப்போ துவங்குது

ஆனால் விக்ரம் பட ஷுட்டிங் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து பாதியிலேயே விலகினார் கமல். அவருக்கு பதில் சிலம்பரசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் சீசன் 6 ஐ தொகுத்து வழங்க தான் வருவதாக கமல் ஏற்கனவே அறிவித்து விட்டார். அந்நிலையில் வரும் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் பிக்பாஸ் சீசன் 6 துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போட்டியாளர் தேர்வு துவங்கியது

போட்டியாளர் தேர்வு துவங்கியது

ஏற்கனவே போட்டியாளர் தேர்விற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறதாம். இதுவரை முடிந்த 5 சீசன்களிலும் பெரும்பாலும் சினிமா மற்றும் டிவி பிரபலங்கள், ஜுலி, லாஸ்லியா போன்ற ஒரு சில அறிமுகமில்லாத சாதாரண ஆட்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசனிலும் பரபரப்பை கூட்டுவதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறதாம்.

என்னது இவரும் பங்கேற்கிறாரா

என்னது இவரும் பங்கேற்கிறாரா

இதுவரை வெளியான உறுதியற்ற தகவலின்படி, இசையமைப்பாளர் டி.இமானின் முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சர்டும் போட்டியாளராக கலந்து கொள்ள போகிறாராம். இமான் மற்றும் மோனிகா இருவரும் 12 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமீபத்தில் இமானுக்கு இரண்டாவது திருமணமும் நடந்து முடிந்தது. இமான் - மோனிகாவிற்கு இரண்டு பெற் குழந்தைகள் உள்ளனர்.

ஏற்கனவே அனல் பறக்குதே

ஏற்கனவே அனல் பறக்குதே

சமீபத்தில் இமான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அமலிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. சோஷியல் மீடியாவில் தனது முன்னாள் கணவர் இமானை மோனிகா கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏற்கனவே பரபரப்பை கிளப்பி வரும் மோனிகா, பிக்பாஸ் சீசன் 6 ல் பங்கேற்க போகிறாரா, இல்லையா என்பதை விஜய் டிவி தான் உறுதி செய்ய வேண்டும்.

அப்பவே அப்படி...இப்போ என்ன ஆகும்

அப்பவே அப்படி...இப்போ என்ன ஆகும்

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 2 ல் தாடி பாலாஜி மற்றும் அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த அவரின் மனைவி நித்தியா ஆகியோரை போட்டியாளர்களாக களமிறக்கியது விஜய் டிவி. நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் சேர்ந்து வாழ முடிவெடுத்ததாக கூறப்பட்டது. பிறகு மீண்டும் சண்டை போட்டு பிரிந்த இவர்களின் விவகாரம், சமீப நாட்களாக பூதாகரமாக வெடித்து வருகிறது. மகளை வைத்து நடக்கும் இவர்களின் சண்டை போலீஸ் வர சென்று விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X