Just In
- 2 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 3 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 3 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 3 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தனுஷின் டி-40 ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் இன்னைக்கு வருது.. டிரெண்டாகும் #D40FirstLookUpdate ஹாஷ்டேக்!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள டி-40 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் இன்று வெளியாகவுள்ளது.
அதை கொண்டாடும் வகையில் காலை முதலே தனுஷ் ரசிகர்கள் #D40FirstLookUpdate என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ரஜினியின் பேட்ட திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
|
கார்த்திக் சுப்புராஜ்
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் குறும்பட இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ், விஜய்சேதுபதியை வைத்து பீட்சா எனும் ஹிட் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, ஜிகிர்தண்டா, இறைவி, மெர்க்குரி, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனுஷின் டி-40 படத்தை இயக்கி உள்ளார்.
|
என்ன டைட்டில்?
கொடி, பட்டாஸ் படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ், டி-40 திரைப்படத்திலும் டபுள் ரோலில் நடித்துள்ளார். பேட்ட வேலன் கெட்டப்பில் தனுஷ் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயரான சுருளி தான் படத்தின் டைட்டிலாக இருக்கும் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்ட
கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்தை இயக்கி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா, சிம்ரன் நடித்திருந்தனர். மேலும், பாலிவுட் வில்லனான நவாஸுதின் சித்திக் மற்றும் விஜய்சேதுபதி ரஜினிக்கு வில்லன்களாக நடித்து அசத்தினர். சசிகுமார் மற்றும் மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா என நட்சத்திர பட்டாளமே பேட்ட படத்தில் நடித்திருந்தது.
|
டி-40
பேட்ட படத்தை தொடர்ந்து தனுஷின் டி-40 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். சம்மர் ரிலீசாக இந்த படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். லண்டன் மற்றும் மதுரையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இன்று டி-40 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
கேங்ஸ்டர் படம்
கேங்ஸ்டர் படம் என்றாலே நடிகர் தனுஷுக்கு அல்வா சாப்பிடுவது போல, புதுப்பேட்டை, வடசென்னை படங்களை தொடர்ந்து வெறித்தனமான கேங்ஸ்டர் படமாக டி-40 இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஜிகிர்தண்டா, பேட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு தரமான சம்பவத்தை கார்த்திக் சுப்புராஜ் செய்ய உள்ளார்.
|
அசுரனை மிஞ்சுமா?
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் திரைப்படம், அசுரனை மிஞ்சுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமர்ஷியல் என்டர்டெயினர் ஆக வெளியாகி குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியது. இந்நிலையில், டி40 படம் அசுரனை மிஞ்சுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.